அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், ஐந்தாம் நிலை வீராங்கனையான எலெனா றிபெகினா சம்பியனாகியுள்ளார்.
முதல் நிலை வீராங்கனையான அரீனா சபலெங்காவுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-4 என்ற ரீதியில் முதலாவது செட்டை வென்ற கஸக்ஸ்தானின் றிபெகினா, 4-6 என்ற ரீதியில் இரண்டாவது செட்டை இழந்து தீர்க்கமான மூன்றாவது செட்டில் 0-3 என பின்தங்கியிருந்தபோதும் மீண்டு வந்து 6-4 என்ற ரீதியில் செட்டைக் கைப்பற்றி சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் வென்று றிபெகினாவும், தனது அரையிறுதிப் போட்டியில் உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினாவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று பெலாரஸின் சபலெங்காவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.