மாநகர சபையின் பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு திருமலையில் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாநகர சபை அண்மைக்காலத்தில் மேற்கொண்ட பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,இளைஞர்கள் குழு ஒன்றினால் சபைக்கு முன்பாக திங்கட்கிழமை (24) அன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த சுமார் 50 இளைஞர்கள்,மாநகர சபை வாசலில் தமது கண்களை கருப்பு துணியால் கட்டியபடி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையோரின் கல்வி,வேலை வாய்ப்பு, திறன் விருத்தி சார்ந்து பல்வேறு சமூக செயற்பாடுகளை “தளம்” நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம் தற்போது மாநகர சபைக்கு உரித்தான கட்டிடத்தொகுதியில் இயங்கி வருகிறது.

இக்கட்டிடம் தொடர்பில் சபையானது முறையற்ற,சட்ட முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளையோரின் தொழில் முயற்சிகளை தடை செய்யும் ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

ஏன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் என செய்தியாளர்கள் வினவிய போது அதற்கு பதிலளித்த இளைஞர்கள்

“மாநகரசபைக்குரித்தான இக்கட்டிடம் தொடர்பில் சபையினால் தற்போது திறந்த கேள்வி குத்தகை விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.அந்த விண்ணப்ப படிவங்களை பெற தளம் நிறுவனத்திற்கு சபையின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.அத்துடன் குத்தகை கேள்வி கோரப்பட்ட கட்டிட தொகுதிகளுக்கு முறையற்ற விதத்தில் குத்தகை தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நகரின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் உரிமைசார் நம்பிக்கைகளை மீறி,கவனயீனமாக நிர்வாகம் செயல்படுகின்றது.

நகர வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துகள் அதிகரித்து செல்கின்றன.இவற்றை சபை கட்டுப்படுத்த தவறியுள்ளது. திருகோணமலை பேருந்து நிலையம் போன்ற பொதுச் சொத்துக்களை பேணும் நடவடிக்கைகளில் சபை கவனமின்றி செயல்படுகின்றது”என்று கூறினர்

மாநகர சபைக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அமைதியான முறையில் இளைஞர்கள் சபை அலுவலகத்திற்கு சென்று மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர்.இருந்த போதிலும் அங்கிருந்த காவலாளி மாநகர சபை ஆணையாளர் அலுவலகத்தில் இல்லை என பொய் கூறியமையால் அவருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது சற்று பதற்றமான நிலை அங்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆணையாளர் இளைஞர்களின் பிரதிநிதிகள் மூவரை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உப முதல்வர் மற்றும் சபையின் இரண்டு உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில், இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்படும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஆணையாளர் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் தமது போராட்டத்தை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறினர்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் 26 ந் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் தாம் விசேட கவனம் செலுத்தி உரையாற்ற உள்ளதாக சபை உறுப்பினர் ஜெயசீலன் நாகரஜுன் இளைஞர்களுக்கு உறுதியளித்தார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை