சிறந்த நூலகங்களுக்கான விருது நிகழ்வு

2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி அவர்களின் தலைமையில் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

2024ஆம் பயனுள்ள வகையில் வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படுத்திய மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் பாடசாலை நூலகங்கள் என ஏறத்தாழ 1500 நூலகங்கள் இவ்விருதுக்காக அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில், நாடு முழுவதிலும் இயங்கி வருகின்ற நூலகங்களுள் கடந்த வருடம் மிகவும் சிறப்பாக தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தியதுடன், வாசிப்பை மேம்படுத்தும் விசேட செயற்றிட்டங்களை சிறப்பாக செயற்படுத்திய 52 நூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விழாவில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பேத்தாழை பொதுநூலகம், வாழைச்சேனை பொதுநூலகம், விநாயகபுரம் பொதுநூலகம், சந்திவெளி பொதுநூலகம், தேவபுரம் பொதுநூலகம் என 05 பொதுநூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டமை மிகவும் குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை ரீதியாக 2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளவற்றுள் அதிக நூலகங்களைக் கொண்ட பிரதேச சபையாக மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை விளங்குகின்றது.

பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பொதுநூலகங்களுக்கான தேர்வில் அகில இலங்கை ரீதியாக பேத்தாழை பொதுநூலகம் மீண்டும் முதலிடம் பெற்றுக் கொண்டது. இதற்கான விருதினை பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி அவர்களும், சான்றிதழினை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க அவர்களும் வழங்கி வைக்க பேத்தாழை பொதுநூலகப் பொறுப்பாளர் மரகதம் பிரகாஷ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப். அப்துல்லா ஹாரூன், நூலக உத்தியோகத்தர்களான புஸ்பா தயாளன், புனிதா ஈவெரா, கந்தையா கங்கா ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

வாழைச்சேனை பொதுநூலகத்தின் சார்பாக நூலகப் பொறுப்பாளர் தாரணி தங்கத்துரை அவர்களுடன் சிவனேஸ்வரி செல்வேந்திரன், தனுஜா துரைசாமி, அரியநாயகம் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். சந்திவெளி பொதுநூலகத்தின் சார்பாக நூலகப்பொறுப்பாளர் சுதாமதி அருள்பிரகாசம் அவர்களும், சிவஞானசெல்வரெட்ணம் குகதீசன் அவர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர். தேவபுரம் பொதுநூலகத்தின் சார்பாக நூலகப்பொறுப்பாளர் நடராஜமணி புலேந்திரன் அவர்களும், கணேசமூர்த்தி ரவீந்திரன் அவர்களும் இணைந்து பெற்றுக்கொண்டனர். விநாயகபுரம் பொதுநூலகம் சார்பாக நூலகப்பொறுப்பாளர் கணபதிப்பிள்ளை பிறேம்குமார் அவர்களும், ஆறுமுகம் அருமைநாயகம், நிலக்சினி மஞ்சுதராஜ் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில், நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. சுனில், தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் செனானி பண்டார மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் பிரதிப் பணிப்பாளர் இரோமி விஜேசுந்தர மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட நாடு முழுதிலுமிருந்து விருதுக்காக தேர்வுசெய்யப்பட்ட நூலகங்களில் பணிபுரிகின்ற நூலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Thileepan

திலீபன் சிலை திறப்பு நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்தமை குறித்து விசாரணை?

September 22, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை

dsa

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

September 22, 2026

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து

photo-collage.png

தியாக தீபம் திலீபன் நினைவாக சித்திரப் போட்டிகள்

September 22, 2026

​அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எமது வரலாற்றைக் கடத்தும் முகமாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றி நடாத்தப்படும் சித்திரப் போட்டி…

Gnanasa

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

September 22, 2026

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து

va

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

September 21, 2026

மேற்கு – மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய- கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம்,

CM-Vijay-2

“அக். 2 காந்தி ஜெயந்தி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்!” – முதல்வர் விஜய் அறிவிப்பு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான

790457579_1953889535287104_7272108374973593865_n

மதுராந்தகத்தில் அக். 3-இல் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம்!

September 21, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை ஆதரித்துப்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“ஜெம் வீரமணி விவகாரம் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருக்காது?” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,

1200-675-27679355-thumbnail-16x9-ajith

“அஜித்துக்காகக் காத்திருக்கும் பொதுச்செயலாளர் பதவி!” – ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’ (TMK)

September 21, 2026

கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியால் உந்தப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’

618c12f4bb64efc3583f8a25311d96ad

“ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் தப்பவிடக் கூடாது!” – முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு

September 21, 2026

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான சிறுமி வன்கொடுமை (போக்சோ) வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கூடத் தப்பவிடக் கூடாது

ஸ்டாலின்

“மீனவர்கள் இடத்தில் தலைமைச் செயலகம் யாருடைய ஆசைக்காக?” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

September 21, 2026

ன்னை: பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் வாழ்விடங்களை அழித்துவிட்டுப் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை ஆளும் தவெக அரசு உடனடியாகக் கைவிடாவிட்டால்,

1200-675-25418417-thumbnail-16x9-sanmugam

“ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவதா?” – சிபிஎம் சண்முகம் காட்டம்

September 21, 2026

சென்னை: பொதுவுடைமைக் கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் ‘சிங்காரவேலர் அறிவகம்’ திறப்பு