அரசியல் ஆதரவுள்ள குழு; கிளிநொச்சிக்கு சுத்தமான குடிநீரை வழங்கத் தடை

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை போகின்ற அரசியல் தரப்பு ஒன்றின் ஆதரவுள்ள சிறு குழுவினர் தடையாக உள்ளனர் இதனால் இம்மாவட்ட மக்கள் மிகவும் ஆபத்தான நோய் மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் தடை ஏற்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (22) அவரது அலுவலகததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து வழங்கி வருகிறது.

ஆனால் கிளிநொச்சி குளமானது கிளிநொச்சி நகரின் அனைத்து கழிவுகளும் வந்து சேர்கின்ற குளமாக காணப்படுவதோடு, ஆறு வழியாக இரத்தினபுரம் பாலம் ஊடமாக கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகள் உட்பட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற பல கழிவுகள் கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. ஆத்தோடு கிளிநொச்சி குளம் மற்றும் அதன் நீரேந்து பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ளவர்களின் மலக்கழிவுகளும் கிளிநொச்சி குளத்திற்கு வருகிறது. இதன் காரணமாக கிளிநொச்சி குளம் கழிவுகள் நிறைந்த குளமாக காணப்படுகிறது.

இந்த குளத்திலிருந்தே நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு விநியோகிப்படுகிறது. ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரிடம் காணப்படுகின்ற நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இக் கழிவுகள் அனைத்தையும் முழுமையாக சுத்திகரிக்கும் இயலுமை காணப்படவில்லை. அதனால் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் தரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளது. அதிகளவு விவசாய நடவடிக்கைகளில் அதிகளவு இராசயனங்களின் பயன்பாட்டால் இவ்வாறு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந் நீரை குடிநீராக பயன்படுத்துகின்ற மக்களில் பலர் நிரந்தர சிறுநீரக நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

முக்கியமாக கண்டாவளை பிரதேசத்தில் மூன்று வீதமான மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளது இதற்கு பிரதான காரணம் குடிநீரை எனக் கூறப்படுகிறது. எனவே இந்த மக்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும். இந்த பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய பொறுப்பு மாவட்டத்தின் உள்ள பொறுப்பு வாய்ந்த அனைவருக்கும் உண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக ஆயிரக்கணக்கான பொது மக்களின் சிறுநீரகங்களை அடைவு வைக்க முடியாது.

எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 24 வீதமான மக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதனை சுத்தமான பாதுகாப்பான நீராக விநியோகிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இதற்கு முன் எவர் தடை ஏற்படுத்தினால் அவர்களை கருத்தில் எடுக்காது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க பொறுப்பு வாய்ந்தவர்க்ள முன்வர வேண்டும்.

அத்தோடு பரந்தன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் கௌதாரிமுனை சுற்றுலாத்தளம் என்பவற்றுக்கு நீர் வசதியினை வழங்கின்ற போதே மாவட்டம் அபிவிருத்தியை நோக்கி செல்லும் அறிவியல் நகர் பல்லைகழகம், இரண்டு பெரிய ஆடைத்தொழிற்சாலைகள், ஆனையிறவு உப்பளம் போன்றவற்றுக்கும் தடையின்றிய நீர் விநியோகம் அவசியம் இவை மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயம்.

எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுத்தமான குடிநீர் விநியோகத்தை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். கிளிநொச்சி கழிவுகள் தேங்கி நிற்கின்ற குளமான கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெறுவதனை நிறுத்தி இரணைமடுகுளத்திலிருந்து நேரடியாக நீரை பெற்று சுத்திகரித்து கிளிநொச்சி மக்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு கோருகின்றேன்.

இரணைமடு குளத்தை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் ஏக போக உரிமை கோர அனுமதிக்க முடியாது அவர்களின் நலன்களுக்காக மாவட்ட மக்களின் நலன்களை பகடையாக்க முடியாது இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளம் என்பது சட்டரீதியான பதிவுக்குட்பட்ட ஒரு அமைப்பு அல்ல என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக ஊடகவியலாளர் ஒரு தகவலை பெற்று வெளிப்படுத்தியிருகின்றார்.

எனவே சட்டரீதியற்ற ஒரு அமைப்பின் கருத்துக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற குடிநீரை விநியோகிக்க அனுமதிக்க முடியர்து. எனவே இதற்கு விரைவில் உரிய தீர்வு காணப்படவில்லை எனின் பாதிக்கப்பட்ட மக்களுடன் வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Thileepan

திலீபன் சிலை திறப்பு நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்தமை குறித்து விசாரணை?

September 22, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை

dsa

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

September 22, 2026

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து

photo-collage.png

தியாக தீபம் திலீபன் நினைவாக சித்திரப் போட்டிகள்

September 22, 2026

​அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எமது வரலாற்றைக் கடத்தும் முகமாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றி நடாத்தப்படும் சித்திரப் போட்டி…

Gnanasa

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

September 22, 2026

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து

va

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

September 21, 2026

மேற்கு – மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய- கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம்,

CM-Vijay-2

“அக். 2 காந்தி ஜெயந்தி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்!” – முதல்வர் விஜய் அறிவிப்பு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான

790457579_1953889535287104_7272108374973593865_n

மதுராந்தகத்தில் அக். 3-இல் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம்!

September 21, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை ஆதரித்துப்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“ஜெம் வீரமணி விவகாரம் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருக்காது?” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,

1200-675-27679355-thumbnail-16x9-ajith

“அஜித்துக்காகக் காத்திருக்கும் பொதுச்செயலாளர் பதவி!” – ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’ (TMK)

September 21, 2026

கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியால் உந்தப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’

618c12f4bb64efc3583f8a25311d96ad

“ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் தப்பவிடக் கூடாது!” – முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு

September 21, 2026

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான சிறுமி வன்கொடுமை (போக்சோ) வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கூடத் தப்பவிடக் கூடாது

ஸ்டாலின்

“மீனவர்கள் இடத்தில் தலைமைச் செயலகம் யாருடைய ஆசைக்காக?” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

September 21, 2026

ன்னை: பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் வாழ்விடங்களை அழித்துவிட்டுப் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை ஆளும் தவெக அரசு உடனடியாகக் கைவிடாவிட்டால்,

1200-675-25418417-thumbnail-16x9-sanmugam

“ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவதா?” – சிபிஎம் சண்முகம் காட்டம்

September 21, 2026

சென்னை: பொதுவுடைமைக் கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் ‘சிங்காரவேலர் அறிவகம்’ திறப்பு