பெரிய அப்பார்ட்மெண்ட், மால்ஸ்ல லிஃப்ட்ல நுழைஞ்சதும் கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுப்போம்; ஆனா அது பியூர் டிசைன் இல்ல, சயின்ஸ் ட்ரிக். கண்ணாடி நம்ம கவனத்தை திசை திருப்பி, லிஃப்ட் வேகமா போகுற மாதிரி ஃபீல் கொடுக்குது, அடைச்ச இட பயம் குறைக்குது. வீல்சேரில் வர்றவங்க ரிவர்ஸ்ல சுலபமா வெளியேறவும், பாதுகாப்பா யூஸ் பண்ணவும் இது ரொம்ப உதவுது.
முன்னாடிலாம் உயரமான பில்டிங் கட்ட ஆரம்பிச்சப்போ, லிஃப்ட்ல போறவங்க எல்லாரும் “என்னப்பா இது, லிஃப்ட் இவ்வளவு ஸ்லோவா போகுது! உள்ளே போனாலே ஒரு மாதிரி அடைச்ச மாதிரி பயமா இருக்குப்பா!”னு கம்ப்ளைன்ட் பண்ணாங்க. அப்போ இன்ஜினியர்கள் லிஃப்ட்டோட வேகத்தை எக்ஸ்ட்ராவா கூட்டுறதுக்கு பதிலா, ஒரு சூப்பர் ஐடியா பண்ணி உள்ள கண்ணாடியை மாட்டுனாங்க. ஏன்னா, மக்கள் உள்ள போனதும் கண்ணாடி முன்னாடி நின்னு தங்களைச் சரி பண்றதுலயே பிஸியா ஆயிட்டாங்க!
இதனால டைம் போறதே தெரியாம லிஃப்ட் டிராவல் டைம் ரொம்ப கம்மியான மாதிரி ஒரு ஃபீல் கிடைச்சதுன்னு ‘சைக்காலஜி டுடே’ வெப்சைட் ரிப்போர்ட்ல தெளிவா சொல்லியிருக்காங்க.
அதுமட்டும் இல்லாம, ‘பெட்டி மாதிரி மூடிய அடைச்ச இடத்துக்குள்ள போனா’ இயல்பா பயம் வரும் கிளாஸ்ட்ரோஃபோபியா பிரச்னை இருக்குறவங்களுக்கு, இந்த கண்ணாடி வந்து லிஃப்ட்டை இன்னும் பெரிய இடமா காட்டுற ஒரு உணர்வை உண்டாக்கி பயத்தைக் குறைக்குது.
உலகத்துலயே ரொம்ப பாஸ்ட்டா போற லிஃப்ட் எங்க இருக்கு தெரியுமா?. ‘சீனாவுல இருக்குற குவாங்சோ சிடிஎஃப் பைனான்ஸ் சென்டர் பில்டிங்லதான்’ உலகத்துலேயே ஸ்பீடான லிஃப்ட் இருக்கு.