அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தம் ஜனநாயகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச டித்வா சூறாவளியை போன்று பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
கொழும்பு வத்தளையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் பலவீனப்படுத்த முயல்கின்றது.
நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்குட்படுத்தி அதனை நிறைவேற்றதிகாரத்தின் வேலையாளாக மாற்றுவதும் ஒரு கட்சி ஜனநாயகத்தினை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கம்.
இலங்கையின் 22 மில்லியன் மக்களின் அரசியல் சமூக சுதந்திரத்தினை பாதுகாப்பதற்காக ஏதேச்சதிகார ஆட்சியினை ஸ்தாபிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கவேண்டும்.
நாட்டின் தற்போதைய பேரிடர் முகாமைத்துவ பொறிமுறை காலத்தால் பிந்தியது,என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.