பெண்ணொருவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய நபரொருவர், நேற்று (12) மாலை நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்காஸ் தோட்ட பகுதியில் உள்ள தங்குமிட விடுதியொன்றில், கடந்த நவம்பர் 10 ஆம் திகதி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டமை குறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கமைய விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு குறித்த சந்தேகநபர் […]
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவில் கஸ்ஸப தேரரைத் தவிர மேலும் மூன்று தேரர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்களை மனநல மருத்துவப் பரிசோதனைக்கும், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார். ராஜாங்கனயே சத்தாரதன தலைமையிலான குழுவினருடன் ஏற்பட்ட […]
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணி

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை வியாழக்கிழமை (12) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசாங்கள் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். எதிர்வரும் 27 ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற உள்ள நிலையில் மாவீர்களின் குடும்பத்தினர் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த துயிலும் […]
Microsoft சேவைகளில் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு!

க்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்தின் பல முக்கியமான இணையவழிச் சேவைகளில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, Microsoft Outlook, Microsoft Teams, Copilot உள்ளிட்ட சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை 12 ஆம் திகதி ஆரம்பமான இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்னஞ்சல்களை அனுப்புதல் மற்றும் பெறுதல், மின்னஞ்சல் பெட்டிகளைத் திறத்தல், அலுவலகத் தொடர்பாடல் மற்றும் இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட […]
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய பெத்தெல்

முழங்கால் காயமொன்றிலிருந்து குணமடைவதில் ஏற்பட்ட பின்னடைவையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் ஜேக்கப் பெத்தெல் தவறவிடுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இடதுகால் பெருவிரல் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் டொங்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து விலகிய நிலையில் புதுமுகவீரர்களான சகலதுறைவீரர் ஜேம்ஸ் கோல்ஸும் வேகப்பந்துவீச்சாளர் எடி ஜக்கும் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
9 கட்டடங்களை இடிக்க நடவடிக்கை

திருகோணமலை, ஜமாலியா மற்றும் சிறிமாபுர ஆகிய பகுதிகளில், கரையோரப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மூன்று கட்டடங்கள் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் திணைக்களத்தினால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளன. கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான அறிவித்தல்கள் முறைப்படி, திணைக்களத்தால் கட்டட உரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் வழங்கப்பட்டிருந்தன. எனினும், உரிய தரப்பினர் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து, திணைக்களத்தின் ஊடாகக் கட்டடங்களை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் […]
இலஞ்சம் பெற்ற சுங்கப் பாதுகாப்பு அதிகாரி கைது

இரண்டு மோட்டார் சைக்கிள்களை சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான ஆவணங்களை வழங்குவதற்காக, 30,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சுங்கப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மணியளவில் இலங்கை சுங்கத் தலைமையகத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்குத் தேவையான ஆவணங்களை முறைப்பாட்டாளருக்கு வழங்குவதற்காக, ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 15,000 வீதம் 30,000 […]
மாதாந்த வருமான வரி விலக்கு எல்லை ரூ. 162,500 ஆக உயர்வு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக, மாதாந்த தனிநபர் வருமான வரி விலக்கு எல்லையை 150,000 ரூபாயிலிருந்து 162,500 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், மாதாந்த சம்பளம் பெறுவோருக்கு மேலதிக வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரவு – செலவுத் திட்ட உரையின் பிரகாரம், வருடாந்த தனிநபர் வருமான வரி விலக்குப் படியை 1.8 மில்லியன் ரூபாயிலிருந்து 1.95 மில்லியன் ரூபாயாக உயர்த்த ஜனாதிபதி அநுர குமார […]
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு ரூ. 100 மில்லியன் பரிசு

சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத் துறை சாதனைகளை அங்கீகரித்துப் பாராட்டும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்லும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு 100 மில்லியன் ரூபாய் நிதிப் பரிசு வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார். பாராளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்கான தொடர் நிதிப் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த […]
2027: இலங்கையின் வரவு செலவுத்திட்டம்

தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான அரசாங்கத்தின் மூன்றாவதும் 2027 ஆம் ஆண்டுக்கானதுமான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (12) அன்று சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில், வரவு-செலவுத்திட்டத்தை பிற்பகல் 1.45 மணிக்கு சமர்ப்பிக்கத் தொடங்கிய ஜனாதிபதி பட்ஜெட் உரையை மாலை 6.35 மணிக்கு நிறைவுசெய்தார். சுமார் ஐந்தரை மணிநேரம் ஒரே மூச்சில் தனது உரையை நிகழ்த்தி, யோசனையை முன்வைத்த ஜனாதிபதி, எதிர்க்கட்சியினரை பார்த்து கேலி கிண்டல்களையும் செய்தார். அப்போது சபையில், சிரிபொலி […]