முழங்கால் காயமொன்றிலிருந்து குணமடைவதில் ஏற்பட்ட பின்னடைவையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளைக் கொண்ட அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் ஜேக்கப் பெத்தெல் தவறவிடுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இடதுகால் பெருவிரல் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஜொஷ் டொங்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து விலகிய நிலையில் புதுமுகவீரர்களான சகலதுறைவீரர் ஜேம்ஸ் கோல்ஸும் வேகப்பந்துவீச்சாளர் எடி ஜக்கும் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.