“விடிவதற்குள் வடிந்த வெள்ளம்… திராவிட மாடல் அரசின் திட்டங்கள் நிகழ்த்திய சரித்திரம்!” – கே.என்.நேரு அறிக்கை!

சென்னை: சென்னையில் கனமழையால் தேங்கிய மழைநீர், திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் உடனடியாக வெளியேறியது என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெகவினரின் வெட்டி விமர்சனம்: திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்துள்ள பாராட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத தவெகவினர், 4,000 கோடி ரூபாய் செலவு செய்தது இதற்குத்தானா என்று சமூக வலைதளங்களில் முகாந்திரமில்லாத விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள், சென்னைவாழ் மக்கள் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். […]
“திமுக மேடையில் முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாகப் பேசுவதா?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!
சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சரும் தவெக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, திமுக மேடையில் முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாகப் பேசப்பட்டதற்குத் தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளிகளாக இருந்த மேடைகள்: அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன. அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுகவின் தற்போதைய மேடைகள், அவதூறு கருத்துகளை மட்டுமே பரப்பும் மேடைகளாக மாறிவிட்டன. 2026 […]
“அரசு திணறுவதால்தான் கடன் தேவை குறைந்துள்ளது!” – தவெக அரசின் கடன் சாதனை குறித்து தங்கம் தென்னரசு கேள்வி!

சென்னை: கடன் தேவை எவ்வாறு குறைந்தது என்பதை அரசு கூற வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பு அரை நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் கடன் 21 சதவீதம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மூலதனச் செலவு எவ்வளவு?: குறைந்த அளவு கடன் வாங்கியதைச் சாதனையாக முன்னிறுத்தும் தவெக அரசு, கடன் தேவை எவ்வாறு குறைந்தது என்பதையும், முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் […]
“தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது!” – கணவருடன் கோவையில் போலீஸ் அதிரடி!
கோவை: தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தாராபுரம் இடைத்தேர்தல்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம் வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ளச் சென்றனர். அதற்குப் போலீசார் அனுமதி மறுத்தனர். இதுவே இந்த விவகாரத்தின் தொடக்கமாக […]
ஆல்பர்ட்டா சுதந்திரத்தை நிராகரிக்கவுள்ள நிலையில் கனடிய அதிகாரிகளின் எதிர்வினைகள்

தந்திர வாக்கெடுப்பை (binding independence referendum) நோக்கிச் செல்வதை நிராகரித்து ஆல்பர்ட்டா (Alberta) மக்கள் வாக்களித்துள்ளதைக் காட்டும் கணிப்புகளுக்குக் கனடா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். ஒன்டாரியோவின் (Ontario) பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) கூறுகையில், ஆல்பர்ட்டா “தனது மாகாணத்திற்காக ஒரு வலுவான, மிகவும் வளமான எதிர்காலத்தை அமோகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆல்பர்ட்டாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கனடா நிறைவேற்ற வேண்டும் என்றும், “கரை […]
பச்சை குத்திக்கொண்டால் தலைமுடியை நீளமாக வளர்த்தால் எதிர்காலத்தில்; தண்டனையா,? நீதியமைச்சர் தெரிவித்திருப்பது என்ன?

இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் பச்சைகுத்திக்கொள்வதாலோ அல்லது தலைமுடியை நீளமாக வளர்ப்பதாலோ ஒருவரை சிறைக்கு அனுப்பாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் பற்றிய தவறான அர்த்தப்படுத்தல்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன,இதன் மூலம் பொதுமக்களிடம் தேவையற்ற அச்சம் உருவாகின்றது. குறிப்பிட்ட சட்டமூலம் பச்சை குத்தும் அல்லது தலைமுடியை நீளமாக வளர்க்கும் ஒருவரை சிறைக்கு அனுப்பும் என சில தனிநபர்கள் […]
அடுத்தடுத்து இலங்கை வரும் கப்பல்கள்!

நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினைகளைச் சீர்செய்யும் நோக்கில், புதிய எரிவாயுத் தொகுதிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த ‘FRANCOIS’ கப்பல் நேற்று முன்தினம் (18) இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மேலும் 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவரும் நான்காவது […]
வீடுகள் சேதம் – தீப்பற்றி எரிந்த பனை மரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் ஏற்பட்ட கடுமையான இடி, மின்னல் தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை (19) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட முத்துவாப்பா லேனில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இடி, மின்னல் தாக்கத்தின் காரணமாக வீடுகளின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், […]
7 மாகாணங்களுக்கு கடும் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, வடக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (20) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) அதிகாலை 1.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், […]
4ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்! அரசுக்கு எதிராகத் தீப்பந்தங்களுடன் களமிறங்கிய பிக்குகள்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் குழுவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று(19) 4ஆவது நாளாகவும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், இரவு வேளையில் தீப்பந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பிக்குகளும் பொதுமக்களும் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அரசுக்குத் தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். தீப்பந்தப் போராட்டம் கடந்த 16ஆம் திகதி மதியம் விகாரமகாதேவி பூங்காவை […]