“நாதக வேட்பாளர் கார்த்திகாவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்!” – தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன்மையான கண்டனத்திற்குரியது: நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவைத் தவெக அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் […]

உள்ளகப் பொறிமுறையில் அறவே நம்பிக்கை இல்லை: நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்! – யாழ்.வடமராட்சி ஊடக இல்லம்

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட இலங்கையில் இடம்பெற்ற சகல ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவன பணியாளர்களின் படுகொலைச் சம்பவங்கள், கடத்தல்கள், காணாமலாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாது பாதுகாக்கப்பட்டு வருகின்றமை, இலங்கையின் உள்ளகப் பொறிமுறை மீதான நம்பிக்கையை அறவே இல்லாமல் செய்துள்ளது. எனவே இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தியுள்ளது. மயில்வாகனம் நிமலராஜனின் […]

டக்ளசின் ஊர்காவற்றுறை அலுவலகத்திலும் சோதனை

ஈழமக்கள் கட்சியின் யாழ்அலுவலகத்தை தொடர்ந்து ஊர்காவற்றுறை அலுவலகத்திலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்வேலணையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் எமது இரண்டு அலுவலகங்கள் குறிப்பாக யாழ் அலுவலகமும் ஊர்காவற்றுறை அலுவலகமும் சோதனையிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒரு பகுதியாக நீடிக்க ஆல்பர்ட்டா வாக்காளர்கள் அமோக ஆதரவு

ல்பர்ட்டா மக்கள் கனடாவிலேயே தொடர்வதற்கு அமோகமாக வாக்களித்துள்ளனர். மேலும் ஒரு பிணைப்புள்ள வாக்கெடுப்பு (Binding referendum) மூலம் பிரிந்து செல்லும் முன்மொழிவை அவர்கள் நிராகரித்துள்ளனர். பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மாகாணத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான வாக்காளர்கள் சுதந்திரத்திற்காக அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, நாட்டின் ஒரு பகுதியாகவே நீடிக்கத் தேர்ந்தெடுத்துள்ளதாக ‘எலக்சன்ஸ் ஆல்பர்ட்டா’ (Elections Alberta) தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), “இது கனடாவிற்கு ஒரு சிறந்த முடிவாகும். […]

“முதலமைச்சர் விஜய் இதுவரை மக்களை நேரடியாகச் சந்திக்கவில்லை!” – அவர் இன்னும் ஹனிமூன் பீரியடில் இருக்கிறார் என சரத்குமார் பேட்டி!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இதுவரை மக்களை நேரடியாகச் சந்திக்கவில்லை என்று பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பாஜக மாநிலத் தலைவர் பதவி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து அவர் கருத்து தெரிவித்தார். பாஜக தலைவர் பதவியா?: தமிழ்நாட்டின் பாஜக தலைவராகப் பொறுப்பேற்கப் போகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த சரத்குமார், பத்திரிகைகளில்தான் இதுபோன்ற செய்திகளைக் காண்கிறேன். கட்சித் தலைமை என்னிடம் […]

“முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு!” – திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்குப் போலீஸ் சம்மன்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தவெகவினர் எதிர்ப்பு: சென்னையில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகத் திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேடையில் இருந்தவர்கள் தடுக்கவில்லை: முதலமைச்சர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் […]

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்ட முன்னணி மனு

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் போராட்ட முன்னணி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது என அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 120வது உறுப்புரையுடன் வாசிக்கப்படும் 121உறுப்புரைக்கு அமைய இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பௌத்தமதகுருமாருக்கு எதிராக பொலிஸாரையும் விசாரணை பிரிவினரையும் ஜேவிபி உறுப்பினர்களையும் அனுரபயன்படுத்துகின்றார்- சம்பிக்க

அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜேவிபி உறுப்பினர்களையும் பொலிஸாரையும் பயன்படுத்துகின்றது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 2015 முதல் 2019 வரை 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஜேவிபி தற்போது எதிர்கட்சிகள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துவதை தடுப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. 2022 ஜூலையில் அரகலய மிக உச்சத்தில் இருந்த நாட்களில் ஜேவிபி நாடாளுமன்றத்தை தீயிட்டுக்கொழுத்தப்போவதாக தெரிவித்தது. ஆனால் தற்போது அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கு […]

இலங்கையில் ஷாங்கிரி-லா ஹோட்டல் முதலீடு எவ்வாறான சூழலில் இடம்பெற்றது ?- முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிசிடம் விசாரணை

இலங்கையி;ல் ஷாங்கிரி- லா ஹோட்டல் முதலீடு இடம்பெற்ற விதம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிசிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். செவ்வாய்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்று முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து பல மாதங்களின் பின்னர் 2010 ஏப்பிரல் 23ம் திகதி நான் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றேன், அவ்வேளை இலங்கை வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது […]

செம்மணியின் வெளிப்படும் உண்மை: அறிவியலும் பின்னணியும் நீதிக்கான தேடலும்…

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவா தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கை, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு செயல்பாட்டில் ஒரு முக்கியமான, அதேநேரம் உணர்வுபூர்வமான கட்டத்தைக் குறித்துநிற்கிறது. யாழ்ப்பாணத்துச் செய்தித் தாள்களில் முதன்மைச் செய்தியாக வெளிவந்துள்ள இந்த அறிக்கை, நுணுக்கமான தொல்பொருள் கண்ணோட்டங்களை முன்வைக்கிறது—தொற்றுநோய் பரவல் அல்லது இயற்கை பேரழிவு போன்றவை இந்தப் புதைப்பிடத்திற்கு ஏதுவான காரணிகளாக இருந்திருக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டுவதுடன், இலங்கையின் ஏனைய சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழிகளிலிருந்து செம்மணியை வேறுபடுத்திக் காட்டும் […]