4ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்! அரசுக்கு எதிராகத் தீப்பந்தங்களுடன் களமிறங்கிய பிக்குகள்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் குழுவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று(19) 4ஆவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், இரவு வேளையில் தீப்பந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பிக்குகளும் பொதுமக்களும் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அரசுக்குத் தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.

தீப்பந்தப் போராட்டம்

கடந்த 16ஆம் திகதி மதியம் விகாரமகாதேவி பூங்காவை வந்தடைந்த பிக்குகள், அங்கேயே தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளும் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.

 

 

முன்னதாக, கடந்த 16ஆம் திகதி மேற்படி பிக்குகள் குழுவினர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடிப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அதனைத் தொடர்ந்து புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் பேச்சில் ஈடுபட்டனர்.

எனினும், அந்தப் பேச்சு எவ்வித தீர்வுமின்றித் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, தமது கோரிக்கைகளுக்குத் தகுந்த பதில் கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவிலேயே தங்கியிருந்து போராட்டத்தைத் தொடரவுள்ளதாகப் பிக்குகள் அறிவித்தனர்.

கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படும் வரை தாம் பூங்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்று சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

IMG_0816

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

October 27, 2026

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு

IMG_0815

வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் தளம்பல் நிலை ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

October 27, 2026

வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

IMG_0814

இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

October 27, 2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் மொத்தமாக இதுவரையில் 105,295 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

8

“பழக்க தோஷத்தில் ஆவின் பொருள்களை பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

October 27, 2026

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நெய், வெண்ணெய் மற்றும் இனிப்புப் பலகாரங்களின் விலையைத் தமிழக வெற்றிக் கழக அரசு

7

“8 பேர் அமைச்சர் ஆகிவிட்டதால் மட்டும் அனைத்தும் ஒரே நாளில் மாறிவிடாது” – அமைச்சர் வன்னி அரசு!

October 27, 2026

கோயம்புத்தூர்: சாதிய வன்கொடுமையால் கோவையில் சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவர் அகிலனின் இல்லத்திற்குச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

6

“முதல்வர் ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது!” – நிர்மல்குமார் பேட்டி!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக

5

“அன்பில் மகேஷ் கைது எதிரொலி; இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்..!” – தவெக பதிவு!

October 27, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதைத் தொடர்ந்து, இனி வரும் காலம் திமுகவிற்குத் திக் திக் நிமிடங்கள் என்று

4

“திமுக தீய சக்தி என்றால் தவெக கொடிய தீய சக்தி!” – சீமான் கடும் விமர்சனம்!

October 27, 2026

சிவகங்கை: திமுக தீய சக்தி என்றால், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் ஒரு கொடிய தீய சக்தி என்று நாம்

3

“வெளியில் குற்றவாளிகள்… கைதிகளும் தப்பியோட்டம்” – மு.க.ஸ்டாலின் சாடல்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டச் சிறையில் இருந்து பதினேழு கைதிகள் ஒட்டுமொத்தமாகத் தப்பிச் சென்ற மாபெரும் அதிர்ச்சிச் சம்பவத்திற்குத் திராவிட முன்னேற்றக்

2

“அன்பில் மகேஷ் கைது: மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” – சேகர்பாபு!

October 27, 2026

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு முறையான அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் நானூறு கோடி ரூபாய் அளவுக்கு மாபெரும் மோசடி

1

“சிறையில் இருந்து தப்பிய மேலும் 8 கைதிகள் சிக்கினர்!” – எஞ்சியுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரம்!

October 27, 2026

சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் மேலும்

Toronto-Election-1536x783

டொராண்டோ மாநகராட்சித் தேர்தல் 2026: நகரசபைக்குத் தேர்வானவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் முழுமையான பட்டியல்

October 27, 2026

திங்கள்கிழமை நடைபெற்ற டொராண்டோ மாநகராட்சித் தேர்தலில் 7 புதிய கவுன்சிலர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய கவுன்சிலர்கள்