வங்காள விரிகுடா கடற்பகுதியில் எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் மீண்டும் ஒரு தளம்பல் நிலை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர வானிலை அதிகாரி சஜித் விக்ரமசூரிய, இன்று (27) கூறுகையில், வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகவும், எதிர்காலத்தில் இது குறித்த மேலதிக எதிர்வுகூறல்களை வெளியிட முடியும் எனவும் தெரிவித்தார்.