9 நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம்! ஈரான் விடுத்த அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது இராணுவத் தாக்குதலை நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பல கூட்டணி நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகர் ஒருவர், எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் இராணுவத் தளங்கள் அல்லது பெட்ரோ இரசாயனத் தொழிற்சாலைகள் மீண்டும் தாக்கப்பட்டால், ஒன்பது நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் பழமைவாத அரசியல்வாதியான முகமது மொக்பர் தெரிவித்துள்ளார். ஈரான் எச்சரிக்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான ஈரானின் அரை […]
மஹிந்த, மைத்திரி மீது கடும் விமர்சனம்.! அநுரவை மட்டும் விதிவிலக்காகக் கூறும் சுனில் வட்டகல

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமிப்பதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர், தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவை சுயாதீனமாகவும் முறையாகவும் விசாரணைகளை […]
அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பின்னடைவு! சஜித் கவலை

கொழும்புத் துறைமுகத்தின் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் வெளியேறுவது மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் திரும்பப் பெறப்படுவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, பெருமளவிலான அந்நிய முதலீடுகள் நாட்டிலிருந்து வெளியேறுவதை நாம் வேடிக்கை […]
அல்பேர்ட்டா மக்கள் கனடாவை தெரிவு செய்துள்ளனர்- சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பு குறித்து மார்க் கார்னி

அல்பேர்ட்டா மக்கள் கனடாவை தெரிவு செய்துள்ளனர் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பில் அவர்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளனர், அவர்கள் ஐக்கியம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புதல்,ஒருவரின் நலனில் மற்றவர் அக்கறை கொள்ளுதல் போன்றவற்றை தெரிவு செய்துள்ளனர் அனைத்திற்கும் மேலாக அவர்கள் கனடாவை தெரிவு செய்துள்ளனர் என பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார். அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் தொடர்ந்தும் எண்ணப்பட்டுவரும் வேளையில் பிரிவினை குறித்த இன்றைய இரவின் கேள்விக்கான முடிவுகள் அல்பேர்ட்டா மக்களும் அனைத்துகனடா மக்களும் புதுப்பிக்கப்பட்ட நோக்கம்,மற்றும் […]
ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டும்: தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்ட 10 பெண்கள்!

வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 10 பெண்கள், ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 48 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாட்டுக்குப் பயணமான குறித்த பெண்கள், 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஈழத் தமிழ் […]
யாழில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம் !

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அ. கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. இச்சேவையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் குறித்த சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்மூலம், புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்காகப் பொதுமக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை குறைக்கப்படுவதுடன், […]
கிளிநொச்சியில் 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்றொழிலை மேம்படுத்துவதையும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகளும், 20 மீனவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான படகுகளையும் அடையாள அட்டைகளையும் வழங்கி வைத்தார். இதன்போது, டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் […]