தமிழர் சுயநிர்ணய உரிமைத் தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

தமிழர் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் கொண்டுசெல்வதற்கோ அல்லது ஐ.நா. பொதுச் சபையின் மூலம் ஆலோசனைக் கருத்தைப் பெறுவதற்கோ பிரித்தானியா சட்ட வழிமுறைகளை ஆராய வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வவுனியாவில் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் […]

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாயால் உயர்த்த பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது. அன்று கூடி, பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து […]

நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு

ஹொரணை – கொழும்பு வீதியின் கோனபொல சந்திக்கு அருகில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

துறைமுக நகர சீனப் பிரஜை கொலை வழக்கு: சிகிரியாவில் மேலும் 2 சீனர்கள் கைது!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் மூன்று சீனப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகளைக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சிகிரியாவில் வைத்து சனிக்கிழமை (29) கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, ஒரு சீனப் பிரஜை கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் […]

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கின்றனவா?

சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ப்ரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் […]

ரவிகருணாநாயக்கவை தேடி வீட்டிற்கு சென்ற இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழு

இலஞ்ச ஊழல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சனிக்கிழமை காலை நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்றனர். விசாரணைஒன்றிற்காக ஆஜராகுமாறு விடுத்த அழைப்பை ரவிகருணாநாயக்க ஏற்றுக்கொள்ளாதை தொடர்ந்தே அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர். எனினும் முன்னாள் அமைச்சர் அவ்வேளை வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் திரும்பிச்சென்றுள்ளனர். இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராவதை முன்னாள் அமைச்சர் திட்டமிட்டு தவிர்க்கவில்லை என தெரிவித்துள்ள அவரது ஊடககுழு அவர் ஆஜராவதற்கு மற்றுமொரு […]

அரசாங்கம் சர்வஜனவாக்கெடுப்பை நடத்த திட்டமிடுகின்றதா? எதிர்கட்சி கேள்வி

எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நாடளாவிய ரீதியில் பல பேரணிகள் கூட்டங்களில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா தயாசிறிஜயசேகர அரசாங்கம் 22வது திருத்தம் தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பிற்கு திட்டமிடுகின்றதா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது அரசாங்கம் ஏன் இந்த தொடர் பிரச்சார கூட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது என நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்,22வதுதிருத்தத்தின் நிலைமை குறித்து ஜனாதிபதி நன்கு அறிந்திருக்கவேண்டும் அதனால் தான் அவர் பிரச்சார கூட்டங்களை திட்டமிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் […]

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தொடர்ந்து நீர் விநியோகம்

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கும் அந்த நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த […]

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) அருகில் ஈரான் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்: அரசாங்கம் கண்காணிப்பு

வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) அருகில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கப்பல்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் கப்பல்கள் இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட எல்லைக்கு வெளியே நிலைகொண்டுள்ளதால், இலங்கை அவற்றிற்கு எந்தவித பொறுப்பையும் ஏற்காது என்றும், எந்தவொரு வசதிகளையும் வழங்கி வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். டேங்கர்டிரேக்கர்ஸ் (TankerTrackers) இணையதளத்தின் தரவுகளின்படி, ஈரானைச் சேர்ந்த சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தங்களது தாய்நாட்டின் துறைமுகங்களுக்குச் […]

பாதுகாப்பு கோரி இலங்கைக்குள் நுழைந்துள்ள ஈரானிய கப்பல்கள்!

ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் சுமார் 13இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக TankerTrackers இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் […]