சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளன.
இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ப்ரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.