ஹொரணை – கொழும்பு வீதியின் கோனபொல சந்திக்கு அருகில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.