இலஞ்ச ஊழல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சனிக்கிழமை காலை நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்கவின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்றனர்.
விசாரணைஒன்றிற்காக ஆஜராகுமாறு விடுத்த அழைப்பை ரவிகருணாநாயக்க ஏற்றுக்கொள்ளாதை தொடர்ந்தே அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர்.
எனினும் முன்னாள் அமைச்சர் அவ்வேளை வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் திரும்பிச்சென்றுள்ளனர்.
இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராவதை முன்னாள் அமைச்சர் திட்டமிட்டு தவிர்க்கவில்லை என தெரிவித்துள்ள அவரது ஊடககுழு அவர் ஆஜராவதற்கு மற்றுமொரு திகதியை தருமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.