தொண்டமனாற்று மீன்களை காக்க கடல் நீரை திறந்துவிடுமாறு கோரிக்கை

தெண்டமானாற்றில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால், கடல் நீரை ஆற்று பக்கமாக திறந்து விடுமாறு வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதியான நகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். தொண்டமானாறு, ஆற்றில் பல மீன்கள் இறந்த நிலையில் அண்மைய நாட்களாக கரையொதுங்கி வருகிறது. இது தொடர்பில் தாம் கவனம் செலுத்திய போது ஆற்று நீர் வற்றியமையால், நீரில் உப்பின் செறிவு அதிகமானதால், தான் மீன்கள் இறக்கின்றன என தெரிவிக்கப்பட்டது. அதனால், தொண்டைமானாற்றின் நன்னீர் தடுப்பணை வான் கதவுகளை திறந்து விட்டால் […]

பைக்கில் குழந்தை பெற்றெடுத்த பெண்

பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே குழந்தை பெற்றெடுத்த பெண் இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது. ஆஸ்பத்திரிக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரி வாசலிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார். வியட்நாம் நாட்டின் தாய் குவாங் மாகாணம் புலுவாங் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அருகில் இந்த வியக்கத்தக்க சம்பவம் அரங்கேறியுள்ளது. வியட்நாமை சேர்ந்த 25 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண் […]

கிராம அலுவலர்கள் அடையாள வேலைநிறுத்தம்

தமக்கான பயணப்படியை அதிகரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையைக் கண்டித்து, நாளை (10) திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை (11) ஆகிய இருநாட்கள் நோய் விடுப்புப் (Sick leave) பதிவுசெய்து கடமைகளில் இருந்து விலகியிருக்க கிராம நிலதாரிகள் தீர்மானித்துள்ளனர். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கிராம நிலதாரி தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். கிராம நிலதாரிகளுக்கு வழங்கப்படும் […]

இலங்கையிலும் மின் – கடவுச்சீட்டு

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவாக, இன்னும் ஒரு வருடத்திற்குள் மின்-கடவுச்சீட்டுகளை (e-Passports) விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது விசை உள்கட்டமைப்பு ((PKI): PKI) பாதுகாப்பு அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கான புதிய நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விலை மனு கோரல் விரைவில் கோரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். முன்னைய கொள்முதல் நடைமுறையில் காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாகவே அது இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் […]

ஃபேண்டஸி அட்வென்சராக தயாராகும் சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக- சாகச நாயகனாக நடித்திருக்கும் ‘கரிகாலா’ திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘கரிகாலா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். பிரவீண் கே. பங்காரி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பகாலா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜேனரிளான இந்த திரைப்படத்தை ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் […]

மெஸ்சியின் தந்தை காலமானார்

லகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா வீரரான மெஸ்சியின் தந்தை ஜொர்ஜ் மெஸ்சி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 68 சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர்,சிகிச்சை பயனளிக்காத நிலையில் காலமானார்.

தனுஷ் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘டோரதி’ படத்தின் டீசர்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘டோரதி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்திருக்கிறார். ரூரல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தம்மம் பிலிம்ஸ் […]

ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’

தமிழ் சினிமாவில் குறைந்த முதலீட்டுக்கான திரைப்பட தயாரிப்பில் முக்கியமான பங்களிப்பை அளித்து வரும் நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செப்பு செல.’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராம் இன் லீலா’. இதில் ரியோ ராஜ், வர்த்திகா, மா கா பா ஆனந்த், பாலாஜி, மாளவிகா அவினாஷ், சேத்தன், நயனா, முனீஸ்காந்த் , பிரியங்கா நாயர், […]

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ என கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒன்று என தொடர் வெற்றி படங்களை வழங்கி, ‘ரைசிங் ஸ்டார்’ பட்டம் பெற்ற தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர்கள் விஜய் சேதுபதி- ஆர்யா- அசோக் செல்வன் -நடிகை சுருதிஹாசன்- இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி – மாரி செல்வராஜ் – ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் […]

நடிகர் துஷ்யந்த் நடிக்கும் ‘ஆல் பாஸ்’ படத்தின் அப்டேட்

சசிகுமாரின் ‘ஈசன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, இன்று கதையின் நாயகனாக நடித்து வரும் நடிகர் துஷ்யந்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னமோ சொன்னிங்க பெருசா…’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ் ‘ திரைப்படத்தில் துஷ்யந்த், ஜனனி குணசீலன், ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணியம் சிவா, ஆர். மோகனா , பிரசன்னா பாலச்சந்திரன், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தில் […]