தமிழ் சினிமாவில் குறைந்த முதலீட்டுக்கான திரைப்பட தயாரிப்பில் முக்கியமான பங்களிப்பை அளித்து வரும் நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செப்பு செல.’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராம் இன் லீலா’. இதில் ரியோ ராஜ், வர்த்திகா, மா கா பா ஆனந்த், பாலாஜி, மாளவிகா அவினாஷ், சேத்தன், நயனா, முனீஸ்காந்த் , பிரியங்கா நாயர், தீபா வெங்கட், சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்திருக்கிறார்.
ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் – அய்வா என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் – சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு, திரையுலக வணிகர்களிடம் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரெழிலே.. அடி பேரழிலே தங்க பூ மயிலே எங்கள் மணமகளே ஆதவனே அன்பு மாதவனே இன்ப காவலனே எங்கள் மணமகனே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் உமாதேவி எழுத பின்னணி பாடகர் வி. எம். மகாலிங்கம் பாடியிருக்கிறார். திருமண வைபவங்களின் கொண்டாட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் இந்த பாடல் துள்ளல் இசைப் பாணியில் அமைந்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.