நடிகர் நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜூயல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான மாஸ் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எல் […]

‘செய் செய்யாதே ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், இந்திய தேசிய அளவிலான இந்துத்துவா தலைவருமான ஹெச். ராஜா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘செய் செய்யாதே ‘எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.‌ இயக்குநர் டொக்டர் எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படத்தில் எஸ். ராஜா, குரு விஜய், ஹெச் .ராஜா, தர்ஷினி ரெட்டி, பிரதிக்ஷா மனு பிரசாந்த் , சிதம்பரம் , மௌனிகா பிரீத்தி, தபிதா […]

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடம்?

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றார் எனவும் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் எனவும் ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த செய்தி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் […]

தாய்லாந்து பாடசாலைத் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!

தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 12 வயது சிறுமி சனிக்கிழமை (08) உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதலை நடத்தியவர் 14 வயதுடைய மாணவன் ஆவான். வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வருவதற்கு முன்பாக, குறித்த மாணவன் தனது சொந்த தாத்தா மற்றும் பாட்டியைத் சுட்டுக் கொன்றுவிட்டுப் பாடசாலைக்கு வந்துள்ளான். பின்னர் பாடசாலையில் மேலும் 05 பேரைக் […]

’டொல்பின்’ புயலால் ஜப்பானில் பாரிய பாதிப்புகள்

‘டொல்பின்’ புயல் காரணமாக ஜப்பானின் ஒகினாவா பகுதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் தாய்வானிலும் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் தெற்குப் பகுதியான ஒகினாவாவைத் தாக்கியுள்ள இந்த புயல் காரணமாக, சுமார் 14,000 கட்டடங்களுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் அந்த பகுதிக்கான ஏ.என்.ஏ மற்றும் ஜப்பான் எயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயலால் மணிக்கு 216 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று […]

கனடா 3,323 இந்தியா்களை நாடு கடத்தியது!

கனடா இதுவரை இல்லாத அளவாக கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்தியுள்ளது அந்த நாட்டின் எல்லைச் சேவைகள் முகமை (சி.பி.எஸ்.ஏ) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. நுழைவு இசைவு (விசா) மோசடி, நுழைவு இசைவு காலாவதி உள்ளிட்ட குடியேற்ற விதிமீறல்கள் அடிப்படையில் இவா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிக எண்ணிக்கையாகும். அமெரிக்காவைப் போன்று கனடாவும் அண்மைக் காலமாக குடியேற்ற நடைமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது. வெளிநாட்டு மாணவா்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு […]

சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை பொதி செய்து வீசியவர்கள் கைது

மெகசின் சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு; போதைப்பொருட்களை வழங்கச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேஸ்லைன் வீதியில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவர் அருகே மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, நேற்று (08) மதியம் இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த இடத்தில் சிறைச்சாலைக்குள் 02 பொதிகளை வீச முற்பட்டவேளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் வசம் இருந்த 02 பொதிகளை பரிசோதனை செய்தபோது, 22 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் […]

வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான மையம் மீண்டும் திறப்பு

வெரிட்டேரிசர்ச் (Verité Research) நிறுவனம் தனது முன்னோடி ‘வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கானமையத்தின்’ (Budget Proposals Hub) இரண்டாவது பதிப்பைத் தொடங்கியுள்ளதுடன், 2027 தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகத் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு நாட்டின் மக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாகக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி கண்ட இத்திட்டம், பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தொடரப்படுகிறது. கடந்த ஆண்டில் இலங்கை இலவங்கப் […]

போலியை நாணயத்தாள்களை வைப்புச் செய்ய சென்றவர்கள் கைது

போலி நாணயத்தாள்களைத் தம்வசம் வைத்திருந்த நபர்கள் இருவர் முழங்காவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் தம் வசம் வைத்திருந்த போலி நாணயத்தாள்களை வைப்பு செய்ய முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்கள் 26 மற்றும் 61 வயதுடைய பூநகரி மற்றும் நச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் எனப் பொலிஸார் மேலும் […]

ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம்

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்படவுள்ள இந்த சூரிய கிரகணம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு பகுதியில் காணக் கூடியதாக இருக்கும். முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்படுவதுடன், பகல் […]