பிக்டோ கவுண்டி பகுதியில் காணாமல் போன ‘பாதிக்கப்படக்கூடிய’ முதியவருக்காக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

திங்கட்கிழமை இரவு பிக்டோ கவுண்டி (Pictou County) பகுதியில் “காணாமல் போன பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவருக்காக” (missing vulnerable person) அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 82 வயதான ஸ்காட் அந்தோணி கிராண்ட் (Scott Anthony Grant) என்பவர், நோவா ஸ்கோடியா (N.S.) மாநிலத்தின் நியூ கிளாஸ்கோ (New Glasgow) பகுதியில் திங்கட்கிழமை இரவு 8:30 மணியளவில் கடைசியாகக் காணப்பட்டார். ஈஸ்ட் ரிவர் வீதியிலுள்ள (East River Road) அபெர்டீன் பிராந்திய மருத்துவமனையிலிருந்து (Aberdeen Regional Hospital) […]
செயிண்ட் ஜோன் நகரில் கத்திக்குத்து: கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் பதிவு

கனடாவின் நியூ பிரன்சுவிக் (N.B.) மாநிலத்திலுள்ள செயிண்ட் ஜோன் (Saint John) நகரின் மேல் பகுதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 9:40 மணியளவில் கிங் வீதி (King Street) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் செயிண்ட் ஜோன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், பலத்த காயமடைந்த 27 வயதுடைய நபரையும், காயமடைந்த 54 வயதுடைய […]
: நிர்வாணமாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பொலிஸாரிடமிருந்து தப்பித்து காரைத் திருடிய நபர்: எட்வர்ட் தீவு பொலிஸ் தகவல்

எட்வர்ட் தீவின் (P.E.I.) சம்மர்சைட் (Summerside) பகுதியில் ஜூலை 28 அன்று இடம்பெற்ற இரண்டு வேறுபட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, பொது இடத்தில் நிர்வாணமாக இருந்தமை மற்றும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தமை உட்பட பல குற்றச்சாட்டுகளை 35 வயதுடைய நபர் ஒருவர் எதிர்கொண்டுள்ளார். கிங் வீதியில் (King Street) வசிக்கும் ஒருவர், தனது வீட்டின் பின் பக்க தாழ்வாரத்தில் (back porch) நிர்வாண நிலையில் ஒரு நபர் இருப்பதைக்கண்டு 911 அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மாலை 5 […]
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுதலை!

‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைதான சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு போலீஸார் விடுவித்தனர். தஞ்சாவூரில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், முதல்வர் விஜய் குறித்த அவரது இரட்டை அர்த்தப் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, இன்று (ஆக.4) காலை தஞ்சாவூர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை – நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு காவல் […]
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வாலிபர் கைது
போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 31ஆம் திகதி 2 கிராம் 385 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்து, தெல்தெனிய நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி […]
இலங்கையில் சிறுவர் உரிமைகள் சட்டத்தை வரையறுப்பதற்கு தீர்மானம்

சிறுவர் உரிமைகள் சட்டத்தை வரையறுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக தற்போது காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்ற வகையில் சட்டமொன்றை […]
ஆறு தமிழ் பேசும் கட்சிகள் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக, தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதிகாரப் பகிர்வு, வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டில் உள்ளவர்கள் ஏற்பார்களா? – எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்!

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அநாகரீகமாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனிடையே, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், \”உதயநிதி மனதில் இத்தனை வக்கிரம் இருக்கிறது. இவ்வளவு வக்கிரத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இவர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். பெண்களுக்கு […]
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை: மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்துத் தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை என்றும், இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் பேசிய பேச்சு எந்த வகையிலும் […]
அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை மிகத்தவறானது: தவெக அரசை கடுமையாக சாடிய சீமான்!

சென்னை: காவிரி சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன் என்றும், அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து முனைப்போடு செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பழிவாங்கும் அரசியலில் […]