செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி: வாகனத்தை விட்டு இறங்க மறுத்ததால் பரபரப்பு!

தஞ்சை: தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துச் சர்ச்சையாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் காவல்துறையினர் இன்று காலை 11 மணியளவில் அதிரடியாகக் கைது செய்தனர். அங்கிருந்து அவரைத் தஞ்சாவூர் அழைத்துச் செல்ல போலீசார் புறப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை இன்றே விசாரித்து […]

ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழு

அரச ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது. ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் […]

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டு […]

சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்கும் சதியா? – நீதி அமைச்சர்

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம், சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் ஒரு அலை போல பரவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். எவ்வித சூழ்நிலை உருவெடுத்தாலும், உயிர்ச்சேதங்களைக் குறைத்து நிலைமையைக் […]

சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை – பிள்ளையான்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04) காணொளி மூலம் விசாரணை நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் […]

செம்மணியில் 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்

செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 483 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஜூலை […]

மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு வழக்கு

ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் அதன் துணைச் செயலாளராகிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வெற்றி பெற்றுள்ளது. அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும் யுத்த காலங்களில் மத்திய கல்வி அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக இலங்கை முழுவதிலும் ஏறத்தாழ 350 வரையிலான […]

செம்மணி அகழ்வுப் பணி இன்று மீண்டும் ஆரம்பம்!

செம்மணியில் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மழை அங்கியும், அதனுடன் மீட்கப்பட்ட பொத்தான்களும், காலுறையும் சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் கடந்த 23.07.2026 அன்று மேற் கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது. குறித்த எலும்புக்கூட்டின் கால் பகுதியில் காலுறையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த எலும்புக்கூட்டினை சூழ மரப்பலகை உக்கிய நிலையில் காணப்படுகிறது. அதன்படி […]

உதயநிதியை சட்டப் பேரவையில் குரல் எழுப்புவதை தடுக்கவே கைது – செந்தில் பாலாஜி கண்டனம்!

சென்னை: சட்டப் பேரவையில் குரல் எழுப்புவதைத் தடுக்கவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்றும் ஆஜராகினர். காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விசாரணை முடிந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், […]