பேசாலையில் கடலில் மூழ்கிக் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை (1) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (30) மாலை 6 மணியளவில் காட்டாஸ்பத்திரி மீன்பிடித் துறையிலிருந்து கண்ணாடியிழைப் படகில் இரு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடலில் வலையைப் பரப்பிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் படகில் எரிபொருள் தீர்ந்துபோயுள்ளது. […]

மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை; கைதிகள் பலர் காயம்

மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, மஹர சிறைச்சாலைக்கு வெளியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.  (UPDATE): மஹர சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் கைதிகள் உட்படப் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் […]

நோர்த் யார்க்கில் (North York) இரவில் நடந்த கத்திக்குத்து: தீவிர காயங்களுடன் நபர் வைத்தியசாலையில் அனுமதி

சனிக்கிழமை அதிகாலை நோர்த் யார்க்கில் (North York) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தையடுத்து, நபர் ஒருவர் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ரொறன்ரோ பொலிஸார் (Toronto police) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், யங் வீதி (Yonge Street) மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு (Sheppard Avenue East) பகுதியில் அதிகாலை 1:30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் குறித்து கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காயமடைந்த நபர் […]

மிசிசாக்காவில் (Mississauga) நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் பலத்த காயம்; தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2026) அதிகாலை மிசிசாக்காவில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, பீல் பிராந்திய பொலிஸார் (Peel regional police) சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருகின்றனர். கத்திக்குத்துச் சம்பவம் குறித்து கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை சுமார் 1:00 மணியளவில் டிக்ஸி வீதி (Dixie Road) மற்றும் எக்லிண்டன் அவென்யூ (Eglinton Avenue) பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர். பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (trauma […]

மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பாரா ராகுல்காந்தி? – கேள்வியெழுப்பிய அன்புமணி ராமதாஸ்!

சென்னை: மேகதாது அணைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை ராகுல் காந்தி எதிர்ப்பாரா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டுச் சென்னை திரும்பிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அந்தமானில் காடுகள் அழிக்கப்பட்டால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதனைக் கடுமையாக எதிர்க்கிறார். அதேபோல், மேகதாது அணை கட்டுவதற்காகக் கர்நாடக அரசு காடுகளை அழிப்பதை அவர் […]

ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி: 160 பிலிம் ரோல்களை அதிரடியாக திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன நெடி வீசியதையடுத்து, 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆவின் நிர்வாகம் அதிரடியாகத் திருப்பி அனுப்பியுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட ஆவின் நீல நிறப் பால் பாக்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசியது. இது தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து பரவலான புகார்கள் எழுந்தன. குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினமும் […]

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக்கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் […]

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து  ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. […]

சுதுமலை அம்மன் கோவில் வழக்கு முழுமையாகத் தள்ளுபடி – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு முழுமையாகத் தள்ளுபடி செய்து கட்டளையிட்டுள்ளது. வழக்கின் பின்னணி & நீதிமன்ற வாதங்கள்: வலி. தென்மேற்கு பிரதேச சபையின் அனுமதியின்றி கோவில் திருப்பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி, இடைக்காலக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர்களால் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசாரணை நேரத்தின் போது […]

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம் – உதய கம்மன்பில

  கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் இருவருக்கும் நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு […]