புளியங்குளத்தில் ரயிலில் மோதி நபரொருவர் பலி!

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (31) இரவில் காங்கேசன்துறையிலிருந்து மொறட்டுவை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இச்சம்பவத்தில் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.  

பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்?

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியாக அனுப்பப்பட்ட நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுதி, சோதனையிடப்பட்டு விடுவிக்கப்படும் வரை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அந்தச் சோதனைகள் நேற்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, உலோகக் […]

’பாரமிதா’ இரத்ததான முகாம்

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பாரமிதா’ இரத்ததான முகாம் நேற்று (31) ஜனாதிபதி அலுவலக ‘செமா’ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில், 150 பைன்ட் இரத்த இலக்கைத் தாண்டி, 163 பைன்ட் இரத்தத்தை தேசிய குருதியேற்றல் சேவைக்கு வழங்க முடிந்தமை சிறப்பம்சமாகும். ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம் வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் […]

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தூரமே, அதாவது 13 கிலோ மீற்றர் இடைவெளி மட்டும்தான். ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதி ஆகும். முஸ்லிம் நாடான மொராக்காவில் வறுமை, […]

யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி மீது வழக்கு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்வதாக அறிவித்துள்ளது. போதிய கல்வித் தகைமை இல்லாத நிலையில், யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைத்து, அவருக்கு பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்ஷவிற்கு பயனளித்தமை தொடர்பில் 8 குற்றச்சாட்டுகளின் […]

மீன்பிடி படகுகள் விபத்து

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன. மேலும், விபத்தில் சிக்கிய மீனவர்களைத் தேடும் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 412’ (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நேற்று (31) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற டிங்கி படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை, மற்றொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் மூலமே முதன்முதலில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவத்தின் […]

பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுக!

பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாக முறைமைக்கு பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, சிறிய திருத்தங்களுடன் நிலவும் முறையையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தாலும், இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு முழுமையான மாற்றமே […]

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள். அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம் எமது மாற்றுத்திறனாளிகளுக்காக எமது மக்களால் கட்டப்படுகிறது. இந்த இல்லத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன என தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்தார். மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுவரும் அம்மை அப்பன் இல்லம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (31) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் […]

செம்மணி விவகாரத்தில் உயரதிகாரிகள் எவரும் ஏன் தண்டிக்கப்படவில்லை ஜெனிவாவில் சட்டத்தரணி இரத்னவேல் கேள்வி!

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண சிப்பாய்கள் மாத்திரமேயாவர். மாறாக இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை. இது இக்குற்றங்களுக்கு உண்மையில் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டு, சாதாரண அடிமட்ட சிப்பாய்கள் பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்வியைத் தோற்றுவித்திருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் ‘செம்மணி மனிதப்புதைகுழி: நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட […]

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்கள் சிலரை மீட்பதற்காக, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளன