பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுக!

பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாக முறைமைக்கு பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, சிறிய திருத்தங்களுடன் நிலவும் முறையையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தாலும், இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு முழுமையான மாற்றமே என்பதையும் இங்கு சுட்டிக் காட்டினார்.

அந்த விடயத்தை ஒரே தடவையில் செய்ய முடியாது என்றாலும், நிர்வாகத் துறையில் அது குறித்த ஒரு கருத்தாடலை ஏற்படுத்தி அதற்கு அடித்தளம் இடுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடலில் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் பொது நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவு என்பவற்றுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகள் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக வழங்கக்கூடிய சேவைகள் குறித்து எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

அம்பாறை, மட்டக்களப்பு, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்ட செயலக வளாகங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் களுத்துறை, பிடபெத்தர, அகுணுகொலபெலஸ்ஸ, இரத்மலானை, கோட்டை மற்றும் கொலன்னாவை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாடு முழுவதும் தற்போது 2,000க்கும் அதிகமான குறைவான பயன்பாட்டில் உள்ள கட்டிட நிர்மாணப் பணிகள் காணப்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய அனைத்து நிர்மாணங்களின் தேவைகள் குறித்தும் முறையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அவசியமான நிர்மாணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் கீழ் அரசாங்க நிதிகள் மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கொழும்பு பெருநகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் காலத்திற்குக் காலம் செயற்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைப் பிரதேசத்திற்கு உரிய ஒட்டுமொத்த வடிகாலமைப்புக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

court-judge-hammer-gavel-696x398

சுதுமலை அம்மன் கோவில் வழக்கு முழுமையாகத் தள்ளுபடி – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

August 1, 2026

யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால்

Uthaya

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம் – உதய கம்மன்பில

August 1, 2026

கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

acci main

புளியங்குளத்தில் ரயிலில் மோதி நபரொருவர் பலி!

August 1, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார்

tr

பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்?

August 1, 2026

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான

bl

’பாரமிதா’ இரத்ததான முகாம்

August 1, 2026

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பாரமிதா’ இரத்ததான முகாம் நேற்று

sp

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

August 1, 2026

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான

jos

யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி மீது வழக்கு

August 1, 2026

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக

boa

மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும்

pre

பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுக!

August 1, 2026

பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான

dd

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

August 1, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள். அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம் எமது மாற்றுத்திறனாளிகளுக்காக எமது மக்களால் கட்டப்படுகிறது.

photo-collage.png (7)

செம்மணி விவகாரத்தில் உயரதிகாரிகள் எவரும் ஏன் தண்டிக்கப்படவில்லை ஜெனிவாவில் சட்டத்தரணி இரத்னவேல் கேள்வி!

August 1, 2026

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் 9 இராணுவ சிப்பாய்கள் பெயரிடப்பட்டு, அவர்களில் எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சாதாரண

boat1

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை

August 1, 2026

நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்கள் சிலரை மீட்பதற்காக, இலங்கை விமானப்படை மற்றும்