ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பாரமிதா’ இரத்ததான முகாம் நேற்று (31) ஜனாதிபதி அலுவலக ‘செமா’ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில், 150 பைன்ட் இரத்த இலக்கைத் தாண்டி, 163 பைன்ட் இரத்தத்தை தேசிய குருதியேற்றல் சேவைக்கு வழங்க முடிந்தமை சிறப்பம்சமாகும்.
ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம் வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில், ஒரு சமூக சேவைக் திட்டமாக ‘பாரமிதா’ இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளரும், ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.