போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்டார். 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வரும், குறித்த பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் எதிர்வரும் 2027.09.12 அன்று முடிவடையும் என ஏதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் […]

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை  இன்னமும் விசாரணையை ஆரம்பிக்காமல் இழுத்தடிக்கிறதா அரசு? ஊடக பிரதி அமைச்சரிடம் சுட்டிக் காட்டி கேள்வியெழுப்பிய தமிழ் ஊடகவியலாளர்கள்

வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு இந்த அரசு நீதியினை வழங்கியே ஆக வேண்டும் என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்னவிடம் வடக்கு ஊடகவியலாளர்களினால் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாது பிரதி அமைச்சர் திணறிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போது இச்சம்பவம் […]

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும், அங்கு நடைபெறும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளைத் தடுத்து நிறுத்தி, ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(31) […]

தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க!

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (01) காலை இப்போட்டி நிறைவடைந்தது. கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டார். இது பொதுநலவாய விளையாட்டுத் தொடரில் இலங்கை வெல்லும் 6ஆவது தங்கப் பதக்கமாகும். 2006ஆம் […]

மிட்லேண்டில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

மிட்லேண்ட் (Midland) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிட்லேண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து தெற்கு ஜோர்ஜியன் பே (Southern Georgian Bay) ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார் (OPP) சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிங் வீதியில் (King Street) அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இரவு 8:00 மணிக்குச் சற்றே […]

முன்னாள் லிபரல் எம்பி ராஜ் கிரேவால் மீது தீவிர குற்றச்சாட்டுகள்

முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் (MP) வழக்கறிஞருமான ராஜ் கிரேவால் (Raj Grewal), சர்ச்சைக்குரிய மில்லியன் கணக்கிலான நிதியைத் கடனளித்தவர்களுக்குத் திரும்பச் செலுத்துவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அதற்குத் தமக்கு எதிராக ஒன்ராறியோ சட்டச் சங்கத்திடமோ (Law Society of Ontario) அல்லது பொலிஸாரிடமோ புகார் அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அனுமதியற்ற அடமானங்கள் (Unauthorized mortgages), நம்பிக்கைப் பொறுப்பு நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியமை (Misappropriated trust funds) மற்றும் அடமான மோசடியில் ஈடுபட்டமை […]

மிசிசாகாவில் துப்பாக்கிமுனையில் வாகனம் கடத்தப்பட்ட சம்பவம்: நபர் கைது

மிசிசாகாவில் (Mississauga) இடம்பெற்ற துப்பாக்கிமுனையிலான வாகனம் கடத்தல் (Armed carjacking) சம்பவம் தொடர்பில், மத்திய கொள்ளை தடுப்புப் பணியக (CRB) புலனாய்வாளர்கள் நபர் ஒருவரைக் கைது செய்து குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். கடந்த 2025 பெப்ரவரி 4 ஆம் திகதி மாலை 4:30 மணியளவில், தொர்பிராம் வீதி (Torbram Road) மற்றும் டெரி வீதி கிழக்கு (Derry Road East) பகுதிக்கு அருகில் பாதிக்கப்பட்ட நபர் தனது வணிக வாகனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, துப்பாக்கிகளுடன் முகமூடி அணிந்த இரு […]

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டிற்கு ‘ரிவோல்வர்’ (Revolver) ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நலன்புரி திட்டத்தில் மோசடி: பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் கைது!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் 31.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் அரச ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் […]

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறி

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் […]