தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை  இன்னமும் விசாரணையை ஆரம்பிக்காமல் இழுத்தடிக்கிறதா அரசு? ஊடக பிரதி அமைச்சரிடம் சுட்டிக் காட்டி கேள்வியெழுப்பிய தமிழ் ஊடகவியலாளர்கள்

வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு இந்த அரசு நீதியினை வழங்கியே ஆக வேண்டும் என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்னவிடம் வடக்கு ஊடகவியலாளர்களினால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாது பிரதி அமைச்சர் திணறிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த செயலமர்வில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்ன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ஹர்ச பண்டார, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உதவி மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அரசாங்க அதிபர், பணிப்பாளர், பிரதி அமைச்சர் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் போது தமிழர் தாயகத்தில் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா கூறியிருந்த போதிலும் தற்போது வரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதுள்ளமை தொடர்பில் ஏமாற்றமளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த போது, சகல கோப்புகளும் தூசு தட்டப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் நீதி கிடைக்கும் என்பதாக பிரதி அமைச்சர் பொதுவாக பதிலளித்திருந்தார்.
குறித்த பதிலால் அதிருப்தியடைந்த ஊடகவியலாளர்கள், தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். வடக்கு கிழக்கில் காணப்படும் ஏனைய பிரச்சினைகளைப் போன்று ஊடகவியலாளர்களது பிரச்சினைகளும் பிரத்தியேகமானவை. யுத்தகாலத்தில் அடக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக செயற்பட்ட காரணத்தினால் தான் அவர்களுக்கு இந்த நிலை நேர்ந்தது. வடக்கில் மட்டும் 58 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலியகொட ஆகியோரின் வழக்கு விசாரணைகளில் ஆர்வம் காட்டும் இந்த அரசு படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன், தராக்கி சிவராம், இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் பாரபட்சமாக செயற்பட்டு வருகிறது. என ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையில், விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக இயங்குகின்றன. அதில் அரசு எந்த தலையீடும் செய்யாது. அதே நேரம் தமிழர், சிங்களவர் என்ற அடிப்படையிலும் விசாரணைகளில் முன்னுரிமை காட்டப்படாது என பிரதி அமைச்சர் பதிலளித்திருந்தார். இதனையும் ஏற்க மறுத்த ஊடகவியாளர்கள், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் கோப்புகள் தூசு தட்டப்பட்டிருந்தால் அது தொடர்பில் நாங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை. எப்போது விசாரணை ஆரம்பிக்கும் என விடாது கேள்வி எழுப்பியிருந்தனர்.
உடனடியாக காலத்தை குறித்து எதுவும் சொல்ல முடியாது எனவும் முன்னைய அரசாங்கங்களை விட தற்போதைய தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இது விடயத்தில் நேர்மையாக செயற்படும் என கூறி வேறு நிகழ்வை காரணம் காட்டி செயலமர்வை முடிவுக்கு கொண்டுவர முற்பட்டார்.
இதன்போது மீண்டும் ஊடகவியலாளர் தரப்பில் குறுக்கிட்டு, லசந்த, பிரகீத் விடயங்களை போன்று தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தை விசாரித்தால் அதற்கு காரணமானவர்களாக இராணுவத்தினரும் துணை ஆயுதக் குழுவினருமே கண்டறியப்படுவார்கள். அதனால் தான் இராணுவத்திற்கு எதிராக விசாரணை செய்வதை தவிர்க்க பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை நாம் உணர்கின்றோம். ஊடக அடையாள அட்டை, சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏனைய பகுதிகளில் உள்ள ஊடகவியலாளர்களை போன்று எமக்கும் உண்டு. அதனை மறுப்பதற்கில்லை.
ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது சக ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும். அதை செயற்படுத்தும் பட்சத்தில் அதன் பின்னர் தான் ஊடகத்துறையின் வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பில் நாம் கவனம் செலுத்த முடியும் என்பதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துங்கள் என ஆணித்தரமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
முன்னதாக படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் களுக்கு நீதி கோரி பிரதி அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் ஊடக அமையத்தினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வாயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் ஊடக செயலமர்வினையும் புறக்கணித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த ஊடக செயலமர்வில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் மற்றும் யாழ் ஊடக மன்றம் ஆகிய ஊடக அமைப்புகளை சேர்ந்த 25 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கியே ஆக வேண்டும் என பிரதி அமைச்சரிடம் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

ravi ka

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணிப்பு பணிகளை பார்வையிட்டார். 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வரும், குறித்த பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் எதிர்வரும் 2027.09.12 அன்று முடிவடையும் என ஏதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

August 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு புகைப்படக் கலையக சேவை கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றாக செயலிழந்துள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய

760724513_10164900763283330_1128122124437762457_n

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை  இன்னமும் விசாரணையை ஆரம்பிக்காமல் இழுத்தடிக்கிறதா அரசு? ஊடக பிரதி அமைச்சரிடம் சுட்டிக் காட்டி கேள்வியெழுப்பிய தமிழ் ஊடகவியலாளர்கள்

August 1, 2026

வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு இந்த அரசு நீதியினை

mayi

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

August 1, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும், அங்கு நடைபெறும்

rum

தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க!

August 1, 2026

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப்

HAVGZM2UNVBP3IR3D7AWRRNLAU

மிட்லேண்டில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

August 1, 2026

மிட்லேண்ட் (Midland) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிட்லேண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்

761641048_1666241154445824_3963978908499135405_n

முன்னாள் லிபரல் எம்பி ராஜ் கிரேவால் மீது தீவிர குற்றச்சாட்டுகள்

August 1, 2026

முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் (MP) வழக்கறிஞருமான ராஜ் கிரேவால் (Raj Grewal), சர்ச்சைக்குரிய மில்லியன் கணக்கிலான நிதியைத்

suspect

மிசிசாகாவில் துப்பாக்கிமுனையில் வாகனம் கடத்தப்பட்ட சம்பவம்: நபர் கைது

August 1, 2026

மிசிசாகாவில் (Mississauga) இடம்பெற்ற துப்பாக்கிமுனையிலான வாகனம் கடத்தல் (Armed carjacking) சம்பவம் தொடர்பில், மத்திய கொள்ளை தடுப்புப் பணியக (CRB)

gun

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

August 1, 2026

மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார்

arre

நலன்புரி திட்டத்தில் மோசடி: பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் கைது!

August 1, 2026

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண்

poo

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறி

August 1, 2026

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர்

Gnanasa

செப்டம்பரில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு

August 1, 2026

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல்

TLBLCXQQIVHIZMNVSKKEMAIZPQ

ரொறன்ரோ மேயர் தேர்தல் போட்டிக்குள் கிறிஸ் அலெக்சாண்டரின் வருகை: புதிய கருத்துக் கணிப்பு வெளியிடும் தகவல்கள்

July 31, 2026

ரொறன்ரோ மேயர் தேர்தல் போட்டியில் முன்னாள் கூட்டாட்சி அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டரின் (Chris Alexander) நுழைவு, மற்றொரு போட்டியாளரான பிராட்