“அமைதி வாரியம்” எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து
காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய “அமைதி வாரியம்” எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்துள்ளார். “நாங்கள் இஸ்ரேலுடன் ஒரு புரிதலைக் கொண்டுள்ளோம். இதுகுறித்து இஸ்ரேல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்ரேல் நமக்கு உதவியது. அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர்” என்று ட்ரம்ப் கூறினார். “இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்குமா? நிச்சயமாக, அங்கு நிலவுவது […]
தெற்கு இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம்

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் மின்சார விநியோகம், ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு சில கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலிய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7:46 மணிக்கு (GMT 1746) நிலவிய இந்நிலநடுக்கம், நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் சுமார் 3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக […]
கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நீதிமன்றங்களின் சுயாதீனமான செயற்பாடுகள் வரவேற்புக்குரியவை – சாணக்கியன்
கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு, பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சராக இருந்து, முப்படைகளுக்கும் இராணுவத்தினருக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று எதுவுமே அறியாதவர் போல அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும் கோமாளி போன்று சுற்றிக்கொண்டும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள […]
வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று (31) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், “ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக […]
ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

ரத்மலானை, கந்தவல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நெல்வயல்களை முற்றாக நாசமாக்கிய காட்டுயானைகள்

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல்வயல்கள் காட்டுயானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளன. இரவு வேளையில் காட்டுப் பகுதியிலிருந்து கிராமத்துக்குள் நுழையும் காட்டுயானைக் கூட்டம் அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வங்கிக் கடன்களைப் பெற்று, பெரும் சிரமத்துக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் நாசமாகிவிட்ட காரணத்தினால், தம்மைப் பாரிய […]
சோபால புளியங்குளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று(1) தெரிவித்தனர். பூவரசன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபல உணவகத்தில் தீ விபத்து

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் இன்று (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தத் தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை, தீ விபத்து இடம்பெற்று அனைத்தும் எரிந்து சாம்பலான […]
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் வீதி மீண்டும் மூடல்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் நேற்று(31.07.2026) மீண்டும் மூடப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு, ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி தற்காலிக பாதையூடாக செல்லும் வகையில் திறக்கப்பட்டது. அத்துடன், நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது. எனினும் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்த காரணத்தினால் அந்த வழியை மக்கள் பயன்படுத்த […]
மஹர சிறைச்சாலையில் தீ

மஹர சிறைச்சாலை பதற்றத்துக்கு மத்தியில் சிறைச்சாலை கட்டடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு நிலவி வரும் அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட படையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் சிறைச்சாலைக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.