மஹர சிறைச்சாலை வன்முறையில் கைதி ஒருவர் பலி; 6 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து ஏழு பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, மஹர சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் கைதிகள் உட்படப் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அவசரமாக […]
கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக பகிரங்க குற்றச்சாட்டு!

சென்னை: நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் திமுக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து, தவெக சார்பில் வி.எஸ்.பாபு களமிறங்கினார். தேர்தல் முடிவுகளில் மு.க.ஸ்டாலினை விட வி.எஸ்.பாபு 8,795 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 […]
கிரெமோனா (Cremona) அருகே 21 வயது பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து தீவிர விசாரணை

அல்பர்ட்டா (Alta.), கிரெமோனா அருகே பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை, கிரெமோனா அருகே பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது குறித்து கல்கரி பொலிஸாரின் கொலை வழக்கு விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை உடற்கூறாய்வு பரிசோதனை முடிவடைந்ததையடுத்து, உயிரிழந்தவர் கல்கரியைச் சேர்ந்த 21 வயதான ஷகீரா […]
நோர்த் யார்க்கில் (North York) நெடுஞ்சாலை 400-ஐ முடக்கிய கொடூர விபத்து: ஒருவர் பலி

சனிக்கிழமை காலை நோர்த் யார்க்கில் உள்ள நெடுஞ்சாலை 400 (Highway 400)-ல் ஏற்பட்ட கொடூர வீதி விபத்து காரணமாக, வடக்கு நோக்கிய அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுஞ்சாலை 400 வடக்கு நோக்கிய பாதையில் ஃபின்ச் அவென்யூ (Finch Avenue) அருகே இந்த விபத்து நடந்ததாகவும், அதனையடுத்து அவசர உதவிப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதால் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டதாகவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் (OPP) சமூக வலைத்தளப் பதிவொன்றில் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலேயே […]
200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? – சீமான் ஆவேச கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக அரசு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர்மாறாகக் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான கருவிகள் மீது […]
5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீட்டித்த உயர்நீதிமன்றம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டித்துச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், […]
மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக கூட்ட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நீட் ஒழிப்பு மற்றும் EWS இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு இறுதி நேரத்தில் த.வெ.க அரசு அனுமதி மறுத்தது ஜனநாயக விரோத […]
பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31) பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி […]
மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தின் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மழை பெய்யத் தொடங்கிய வேளையில், வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கத்தால் […]
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்விபத்து வட அட்சரேகை 06 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32′ அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு […]