ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி: 160 பிலிம் ரோல்களை அதிரடியாக திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!

மதுரை:

மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன நெடி வீசியதையடுத்து, 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆவின் நிர்வாகம் அதிரடியாகத் திருப்பி அனுப்பியுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட ஆவின் நீல நிறப் பால் பாக்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசியது. இது தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து பரவலான புகார்கள் எழுந்தன. குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் பாலில் இத்தகைய நெடி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணை மற்றும் பல்வேறு விநியோக மையங்களில் அதிரடி சோதனை நடத்தி, பால் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், பால் பாக்கெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பிலிம் பேப்பர் ரோல்களில் ஏற்பட்ட தரம் மற்றும் குறைபாடே இந்த ரசாயன நெடிக்கு முக்கியக் காரணம் என மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தரமற்ற பிலிம்களை சப்ளை செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பண்ணையில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த ரசாயன நெடி கொண்ட 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஆவின் நிர்வாகம் உடனடியாக ஒப்பந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியது. தற்போது அந்தத் தரமற்ற பிலிம்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு, தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுப் பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகம் எவ்வித பாதிப்புமின்றித் தடையின்றி சீராக வழங்கப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

#AavinMilk #MaduraiAavin #ChemicalSmell #FoodSafety #BmNews #TamilNews #BreakingNewsTN #MaduraiNews #PolytheneRolls #TamilNaduNews #PoliticalUpdate #TamilNewsLive

mahara in

மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை; கைதிகள் பலர் காயம்

August 1, 2026

மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல

crime

நோர்த் யார்க்கில் (North York) இரவில் நடந்த கத்திக்குத்து: தீவிர காயங்களுடன் நபர் வைத்தியசாலையில் அனுமதி

August 1, 2026

சனிக்கிழமை அதிகாலை நோர்த் யார்க்கில் (North York) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தையடுத்து, நபர் ஒருவர் அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

AWUN5RGOHZEHZG4Y54UHWA4OKA

மிசிசாக்காவில் (Mississauga) நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் பலத்த காயம்; தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

August 1, 2026

சனிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2026) அதிகாலை மிசிசாக்காவில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, பீல் பிராந்திய

2

மேகதாது அணைக்காக காடுகள் அழிக்கப்படுவதை எதிர்ப்பாரா ராகுல்காந்தி? – கேள்வியெழுப்பிய அன்புமணி ராமதாஸ்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை ராகுல் காந்தி எதிர்ப்பாரா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரியாகக் கேள்வி

1

ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி: 160 பிலிம் ரோல்களை அதிரடியாக திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!

August 1, 2026

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன நெடி வீசியதையடுத்து, 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை

nilakshan

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

August 1, 2026

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. யாழ். ஊடக

752391120_122112474525381022_3499782480351502009_n

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 1, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

court-judge-hammer-gavel-696x398

சுதுமலை அம்மன் கோவில் வழக்கு முழுமையாகத் தள்ளுபடி – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

August 1, 2026

யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் ஆலயத் திருப்பணி வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை இடித்தழிக்குமாறும் கோரி ஐந்து தனிநபர்களால்

Uthaya

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம் – உதய கம்மன்பில

August 1, 2026

கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

acci main

புளியங்குளத்தில் ரயிலில் மோதி நபரொருவர் பலி!

August 1, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் பாதையின் 290ஆம் கட்டைக்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார்

tr

பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்?

August 1, 2026

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான

bl

’பாரமிதா’ இரத்ததான முகாம்

August 1, 2026

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பாரமிதா’ இரத்ததான முகாம் நேற்று