சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு வழங்கும் நிதியை முழுமையாக நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்பட்ட நிதியை முழுமையாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனால் WHO-க்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை அமைச்சர் ரொபர்ட் கென்னடி ஜூனியர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் காவி அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதை அமெரிக்க நிதியுதவிக்கான […]
இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு

எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். எதிர்பாராத விதமாக வறண்ட காலநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் அசாதாரண காலநிலை நிலைகளை உருவாக்கும் எல் நினோ நிகழ்வு இம்முறை கடுமையான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது உயர் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காலநிலை பயிர்ச் […]
பொலிஸார் தொடர்பாக கடுமையாகும் சட்ட நடவடிக்கை

பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதய குமார வூட்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வதுபிட்டிவல பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கடையொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்துமாறு கூறி, மோட்டார் சைக்கிள் சாரதியை திட்டித்தீர்த்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, […]
கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகிறதா? – வேல்முருகன் ஆவேச கேள்வி!

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு துணை போகிறதா எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மிக ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு (CWRC) உத்தரவிட்ட பிறகும், தண்ணீர் […]
தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை எமக்கு நீதி கிட்டப் போவதில்லை

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று (30) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை” என சிங்கள பௌத்த அரசியல் நிலைப்பாட்டில் நின்று தற்போதைய அரசாங்கத்தின் நீதி […]
சிவப்பு + மஞ்சள் = காவி என்பது உறுதியாகிவிட்டது: தவெக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

சென்னை: நீட் தேர்வு மற்றும் இ.டபிள்யூ.எஸ் (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகன பேரணிக்குத் தவெக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் இன்று சென்னை வேப்பேரியில் மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இதற்குத் தமிழகக் காவல்துறை அதிரடியாக அனுமதி மறுத்ததுடன், பெரியார் […]
ஊடக அமைச்சரின் நிகழ்வை புறக்கணித்து யாழில் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான மற்றும் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2026 ஜூலை 31) ஊடகவியலாளர்களால் உறைப்பான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்கவிருந்த நிகழ்வையே ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாகப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெகுஜன ஊடக […]
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை: செந்தில் பாலாஜி தலைமறைவா? – உச்சகட்ட பரபரப்பு!

சென்னை: தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்றைய தினம் கையெழுத்திட ஆஜராகாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை செந்தில் பாலாஜிக்கு வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் […]
மட்டு. சிறையில் அண்ணனை கொழும்பில் இருந்து பார்வையிட சென்ற தம்பி அவரது நண்பர் போதைப்பொருளுடன் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த சிறையில் உள்ள போதை பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரை ஜஸ் மற்றும் ஹெரோயின் போதை பொருள்களுடன் புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி 07 அரைக் […]
வட பகுதி மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் – அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி!

வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம்.மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை . சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தைக் கட்டியழுப்புவோம் என பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் […]