62 ஆக உயர்ந்தது டெங்கு மரணப் பட்டியல்!

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) வரை பதிவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 29,350 ஆகும். இவ்வாண்டின் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் […]

நிறுவன இரகசியத்தை விற்ற குற்றத்திற்கு ரூ.50 மில்லியன் நட்டஈடு!

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான “உற்பத்தி இரகசியங்கள்” மற்றும் “வணிக இரகசியங்களை” நிதி இலாபத்திற்காக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்திய ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளான ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை அறிவித்தார். கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள கையுறை உற்பத்தி தனியார் நிறுவனம் ஒன்றின் “உற்பத்தி […]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் ; ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பிரனாந்து ,முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (31) வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி இன்று (31) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரங்கள் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது […]

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைகிறேனா? ஓபிஎஸ் தரப்பு விளக்கம்!

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை அவரது தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அறியப்பட்டவர். எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாட்டால் அதிமுகவிலிருந்து விலகிய ஓபிஎஸ், தனது பரம எதிரியான திமுகவில் இணைந்தது அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி […]

வடலூர் வள்ளலார் பன்னாட்டு மைய திட்டம் கைவிடப்பட்டது வரவேற்புக்குரியது – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை: வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்திய ஞானசபை வளாகத்துப் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதைப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனதார வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வதிபுரம் மக்களின் உணர்வுகளுக்கும், வள்ளலாரின் உயரிய நோக்கங்களுக்கும் எதிராக முந்தைய திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் கைவிடப்பட்டது மிகுந்த வரவேற்புக்குரியது என்று தெரிவித்துள்ளார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் […]

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 32 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வாயு வெடிப்பில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்திலேயே இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு அளவுக்கு அதிகமாகச் சேர்ந்ததே இவ்வெடிப்புக்குக் காரணம் என அரசுச் சுரங்க ஆய்வாளர் கனி […]

புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் நேற்று வியாழக்கிழமை (30) விண்ணில் ஏவப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள், மேம்படுத்தப்பட்ட “லொங் மார்ச் 6” (Long March-6) என்ற ரொக்கெட் மூலம் குறித்த ஏவுதளத்திலிருந்து நேற்று காலை விண்ணில் ஏவப்பட்டன. இவை அதிவேக செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தரவு பரிமாற்றச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. லொங் மார்ச் ரொக்கெட் […]

இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த கட்டளையானது நேற்று(30.07.2026) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டளைக்குப் பின்னரே அடுத்த கட்டமாக மூல வழக்கு மீதான விவகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பில் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை தாமே முன்வைத்துள்ளார். எதிராளிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் […]

நெல்லியடி பிரதேசத்தில் மர்ம பொதிகள் மீட்பு

வடமராட்சி – நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 16 kg கேரள கஞ்சா பொதிகள் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம்(31.07.2026) கொழும்பிற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் அரச வேவுச் சேவையினர்(SIS) அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் பின்னணியில் பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகிப்படுகிறது. இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்திதுறை – […]