26வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இலங்கை இராணுவத்தின் 26வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்குப் பதிலாகப் பதவியேற்கிறார். இந்தப் பதவியை ஏற்குமுன், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இராணுவத் தலைமைச் செயலதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சேவையாற்றியுள்ளார். இலங்கை பீரங்கிப் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான இவர், தனது இராணுவ சேவைக் காலத்தில் பல்வேறு […]

வறட்சியால் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு?

நாட்டில் நிலவிவரும் கடுமையான வறண்ட காலநிலை காரணமாகக் காய்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஆரம்பமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தம்புள்ளை பொருளாதார மைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் சி. ஏ. சிரிவர்தன ஊடகங்களிடம் தெரிவிக்கையில், பொருளாதார மையத்திற்கு விநியோகிக்கப்படும் காய்கறிகளின் அளவு நாளொன்றுக்கு 200,000 கிலோகிராம்களால் குறைந்துள்ளதாகக் கூறினார். கடந்த சில நாட்களாக நாளாந்த விநியோகம் 600,000 கிலோகிராம்களிலிருந்து 400,000 கிலோகிராம்களாகக் குறைந்துள்ளது. நிலவும் வறட்சியும், உரத் தட்டுப்பாட்டுமே இத்தகைய நிலைமைக்குக் காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார். […]

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

ஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். போரின் முதல் நாளில், தெற்கு ஈரானிய நகரமான மினாபில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியை அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் தாக்கியதில் குறைந்தது 170 பேர் உயிரிழக்கப்பட்டனர். அதே நாளில், தென்மேற்கு ஈரானிய நகரமான லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கமும் தாக்கப்பட்டதில், குறைந்தது 24 பேர் […]

இந்தியாவிற்கு கடத்தவிருந்த 4,000 கடல் சங்குகள் கைப்பற்றல்

கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதற்காகக் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 44 மூட்டைகளைக் கொண்ட கடல் சங்குகளுடன், சந்தேக நபர் ஒருவர் வியாழக்கிழமை (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வரும், எஸ். எஸ். பெர்னாண்டோ தலைமையிலான விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட சங்குகளின் பெறுமதி பல இலட்சம் ரூபாய் ஆகும். இதில் சுமார் 4,000-க்கும் […]

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை

மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. ​இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு […]

இலங்கையில் மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம் !

இலங்கையிலேயே மிக உயரமான இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று (30) வியாழக்கிழமை ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான சொரூபம், பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டது. 60 அடி உயரமுடைய இச்சொரூபம், வெண் இரும்பினால் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. சுபுவன் அரணவின் நிர்வாகியான அருட்தந்தை டாரெலின் கலைக் கோட்பாட்டிற்கு அமைவாக இச்சொரூபம் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கத்தோலிக்கக் […]

200 மில்லியன் டொலர் நிதியுதவி!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது. இந்த நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது. […]

சுதந்திரபுரம் பிரதான வீதி திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பிரதான வீதி, மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று வியாழக்கிழமை (30) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகரவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் மோசமான நிலையிலிருந்த குறித்த வீதியானது, 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நி ஒதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான […]

கச்சா எண்ணெய் விலை சரிவு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்துள்ளதுடன், அதன்படி அவ்வகையான கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் […]

கொள்கலன் லொறிக்கு தீ

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 ஆகிய வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அத்துடன், அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் காவிலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் […]