முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பிரதான வீதி, மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று வியாழக்கிழமை (30) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகரவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் மோசமான நிலையிலிருந்த குறித்த வீதியானது, 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நி ஒதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான செ.திலகநாதன், புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், ‘தூய்மையான இலங்கை’ அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வடக்கு மாகாண இணைப்பாளர், வடக்கு மாகாண ஆளுநரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.