ஊடக அமைச்சரின் நிகழ்வை புறக்கணித்து யாழில் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான மற்றும் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2026 ஜூலை 31) ஊடகவியலாளர்களால் உறைப்பான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்கவிருந்த நிகழ்வையே ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாகப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு அங்கமாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கருத்தரங்கில் பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவிருந்தார். எனினும், கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அந் நிகழ்வை யாழ். ஊடக அமையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் முழுமையாகப் புறக்கணித்தனர்.
கருத்தரங்கைப் புறக்கணித்த ஊடகவியலாளர்கள், யாழ். மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகக் திரண்டு, ஊடகச் சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரியும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

5

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைகிறேனா? ஓபிஎஸ் தரப்பு விளக்கம்!

July 31, 2026

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை அவரது தரப்பு

4

வடலூர் வள்ளலார் பன்னாட்டு மைய திட்டம் கைவிடப்பட்டது வரவேற்புக்குரியது – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

July 31, 2026

சென்னை: வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்திய ஞானசபை வளாகத்துப் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகச் சென்னை

df

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 32 தொழிலாளர்கள் உயிரிழப்பு

July 31, 2026

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வாயு வெடிப்பில் குறைந்தது

r

புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன!

July 31, 2026

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் நேற்று வியாழக்கிழமை

tn

இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

July 31, 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த

v

நெல்லியடி பிரதேசத்தில் மர்ம பொதிகள் மீட்பு

July 31, 2026

வடமராட்சி – நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 16 kg கேரள கஞ்சா

trum

சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு வழங்கும் நிதியை முழுமையாக நிறுத்தியது அமெரிக்கா

July 31, 2026

அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு

hea

இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு

July 31, 2026

எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி

Pol

பொலிஸார் தொடர்பாக கடுமையாகும் சட்ட நடவடிக்கை

July 31, 2026

பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான

3

கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகிறதா? – வேல்முருகன் ஆவேச கேள்வி!

July 31, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் கர்நாடக அரசுக்கு,

Shakthivel

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை எமக்கு நீதி கிட்டப் போவதில்லை

July 31, 2026

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை

2

சிவப்பு + மஞ்சள் = காவி என்பது உறுதியாகிவிட்டது: தவெக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

July 31, 2026

சென்னை: நீட் தேர்வு மற்றும் இ.டபிள்யூ.எஸ் (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர