குதிரை பேர வழக்கு: முன்ஜாமினுக்கான பிணைத்தொகையை நீதிமன்றத்தில் நேரில் செலுத்திய செந்தில் பாலாஜி

சென்னை: ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரைப் பேரம் பேசிய வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று நேரில் ஆஜரானார். உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை முன்ஜாமீனின் அடிப்படையில், ரூ. 25 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் பிணைத்தொகையை அவர் நீதிமன்றத்தில் செலுத்தினார். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அவரது சகோதரர் அசோக்குமார், வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகக் கரூரில் ஆஜராகவுள்ளதால், அவர் வரும் […]

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு (Harshana Nanayakkara) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை (NCM), இன்று (24) பாராளுமன்றத்தில் 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது பிரேரணைக்கு எதிராக 152 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 36 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். எவரும் நடுநிலை வகிக்கவில்லை. பின்னணி மற்றும் விவாத விவரங்கள்: காரணம்: ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் […]

உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி வலி. வடக்கில் ஆர்ப்பாட்டம் !

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக வெள்ளிக்கிழமை (24) 14ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக […]

ஊர்காவற்றுறையில் 600 கிலோ கேரள கஞ்சா எரிப்பு

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. கடந்த காலங்களில் கடல் மார்க்கமாகக் கடத்திவரப்பட்டபோது கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த கேரள கஞ்சா எரிக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், பொலிஸார், கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் […]

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது !

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமான முறையில் ஊடுருவிய, இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள இலங்கையர்கள் இருவரை ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு இன்று (24) அதிகாலை இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் சென்று இறங்கியதாக ராமேஸ்வரம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது இலங்கையை சேர்ந்த இருவர் வந்திருந்தமை […]

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (24) பிறப்பித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக விசாரணைகளுக்காக வழக்கை ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேகதாது அணை விவகாரம்: 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

சென்னை: காவிரிக் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி மற்றும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுப்பது தொடர்பான விவகாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், பெங்களூரில் வருகிற 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இரு மாநில நீர்ப்பாசன மற்றும் நதிநீர் பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்க உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுச் செல்லும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை உடனடியாகத் […]

முதல்-அமைச்சர் விஜய் மவுனத்தை கலைக்க வேண்டும் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி டெல்டாவின் உயிர்நாடிப் பிரச்சினையில் தவெக அரசின் அர்த்தமற்ற மவுனம் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன் என்றும், மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமரிடம் நேரில் வழங்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குறுவை […]

ஆட்சியைத் தக்கவைக்க பொலிஸாரை பகடைக்காயாகப் பயன்படுத்தும் அரசாங்கம் – நாமல்

அரசாங்கம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பொலிஸாரை அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொலிஸார் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கிளை போலச் செயல்படும் போது, அது நாட்டின் நீதித்துறை அமைப்பிலும் செல்வாக்குச் செலுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் தற்போது விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தோ அல்லது நாட்டில் நிலவும் இளைஞர்களின் வேலையில்லாத் பிரச்சினை குறித்தோ எவ்வித கவனமும் செலுத்தவில்லை. நாட்டின் அடிப்படை […]

தேசியத்தலைவர் உயிருடன் இருக்கிறார்.. உரிய நேரத்தில் வெளிவருவார்: பழ. நெடுமாறன் பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேசியத்தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தான் கூறிவரும் இந்தச் செய்தி உண்மைதான் என்றும் தெரிவித்தார். தற்போதைய நிலையில் அவர் வெளியே வருவதற்கான சர்வதேசச் சூழல் இன்னும் கனிந்து வரவில்லை எனவும், உரிய சரியான நேரத்தில் அவர் வெளிவருவார் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசியத்தலைவரின் மகள் ஏற்கனவே தொலைக்காட்சி முன்பு தோன்றிப் பேசியுள்ளதையும் […]