தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேசியத்தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தான் கூறிவரும் இந்தச் செய்தி உண்மைதான் என்றும் தெரிவித்தார். தற்போதைய நிலையில் அவர் வெளியே வருவதற்கான சர்வதேசச் சூழல் இன்னும் கனிந்து வரவில்லை எனவும், உரிய சரியான நேரத்தில் அவர் வெளிவருவார் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசியத்தலைவரின் மகள் ஏற்கனவே தொலைக்காட்சி முன்பு தோன்றிப் பேசியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ஆம் தேதி தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்ரமணியம் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாகவும், இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து ஓராண்டுக்குப் பிறகு கருத்து கூறுவதே சரியானது என்றும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டதை வரவேற்கிறோம் என்றும் பழ. நெடுமாறன் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.
#PazNedumaranPressMeet #PrabhakaranAlive #WorldTamilarPeramaippu #ThanjavurNews #TamilUniversityCentenary #CMKamarajarBreakfastScheme #TVKGovernance #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #StatePolitics #CurrentAffairs #PoliticalStatements #RegionalNews #TamilEelamHistory #PublicBrief #NewsUpdate #MediaCoverage #TamilNaduUpdates