பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (24) பிறப்பித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக விசாரணைகளுக்காக வழக்கை ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.