நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு (Harshana Nanayakkara) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை (NCM), இன்று (24) பாராளுமன்றத்தில் 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
வாக்கெடுப்பின்போது பிரேரணைக்கு எதிராக 152 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 36 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். எவரும் நடுநிலை வகிக்கவில்லை.
பின்னணி மற்றும் விவாத விவரங்கள்:
-
காரணம்: ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், பலர் பலத்த காயமடைந்தனர். காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நீதி அமைச்சர் தனது பொறுப்பையும் கணக்கக்கூறலையும் நிறைவேற்றத் தவறிவிட்டார் எனக் கூறி எதிர்க்கட்சியினர் ஜூலை 22 அன்று இப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.
-
எதிர்க்கட்சியின் வாதம்: இன்றைய விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இச்சம்பவத்தைக் கையான்ட விதம் குறித்து நீதி அமைச்சரைக் கடுமையாக விமர்சித்ததுடன், அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
-
ஆளுங்கட்சியின் பதில்: அரசாங்கக் தரப்பு எம்.பி.க்கள் அமைச்சரைப் பாதுகாத்துப் பேசியதுடன், இச்சம்பவத்திற்கு அமைச்சரைப் பொறுப்பாக்குவது நியாயமற்றது என்றும், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் காரணத்தைக் கேள்விக்குட்படுத்தியும் வாதாடினர்.