சென்னை:
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரைப் பேரம் பேசிய வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று நேரில் ஆஜரானார். உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை முன்ஜாமீனின் அடிப்படையில், ரூ. 25 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீன் மற்றும் பிணைத்தொகையை அவர் நீதிமன்றத்தில் செலுத்தினார். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அவரது சகோதரர் அசோக்குமார், வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகக் கரூரில் ஆஜராகவுள்ளதால், அவர் வரும் திங்கட்கிழமை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்து பிணை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நீதிமன்றத்தின் மறுஉத்தரவு வரும் வரை இருவரும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை தொடர்கிறது.
#SenthilBalajiCourtAppearance #HorseTradingCase #AshokKumarBail #ChennaiPrincipalSessionsCourt #TVKMLAInquiry #PreArrestBailConditions #ThiruvallikeniPoliceStation #DMKLeader #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #StatePolitics #LegalProceedings #CrimeAndLaw #CurrentAffairs #PoliticalControversy #JudicialUpdate #PublicNews #NewsUpdate