பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம் சந்தித்துள்ளது. 4 முறை சம்பியனான ஜேர்மனியை, வீழ்த்தி பராகுவே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரமும், அதனைத் தொடர்ந்த கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததை அடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி பயன்படுத்தப்பட்டது. போட்டியின் முக்கிய தருணங்கள் மற்றும் சுவாரசியமான […]

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் – 12 பேர் பலி

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் டினிப்ரோ, சப்ரோசினியா, சுமி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் சிக்கி சுமார் 40 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இன்று (30ஆம் திகதி) 1,587வது நாளாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் முதலான […]

திரு. சுப்பையா துரைச்சாமி

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைச்சாமி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திரபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற தேவதாஸ் மற்றும் மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காந்தா, ரஞ்சினி, சசிகலா, ஸ்ரீதரன், பத்மநயனி, சுகந்தா, ஸ்ரீபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கற்பகம், அன்னமுத்து, கந்தையா, பூபதி, கனகரத்தினம் […]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள் தொடர்பில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் துணைவியார் சந்தியா எக்னெலிகொட (Sandya Eknaligoda) ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து. பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 6000 நாட்களை நினைவு கூரும் நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்துரையாற்றிய அவர் கோட்டாபய ராஜபக்சவின் குற்ற இராச்சியத்தின் செயற்படும் இயந்திரமாக இயங்கியவர்தான் சுரேஷ் சலே.இவை நீதிமன்றத்தின் ஊடாக […]

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல்  விசாரரணை ஆணைக்குழுவினால் இன்று (30) செ்வவாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார். ஷியாமலா பெரேரா தேசிய லொத்தர் சபையின் தலைவராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதி முறைகளுக்குப் புறம்பாக, ஊழியர் சபையில் அவ்வாறான பதவிகள் இல்லாத பின்னணியிலும், எவ்வித வெற்றிடங்களுமின்றி மூன்று அதிகாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியுள்ளார். இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு […]

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இன்று மதியம் அத்துமீறி கத்திகளுடன் சென்று பண்ணையாளர்களை மிரட்டிய சிங்களவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்களவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் மேற்படி பகுதியினுல் அத்துமீறி காடு வெட்டி வெளியாக்கி குடிசைகளை அமைத்து வருகின்றனர். இது தொடர்பாக பண்ணையாளர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையில் நிலைமை இன்று மோசமடைந் துள்ளது. இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது […]

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்துக் கூறிய பிள்ளையான், “இது உங்களுக்கு சந்தோஷமான விடயம்தானே” என்றார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, […]

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை ஏந்திய விழிப்புணர்வுப் போராட்டம் நேற்றைய திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த செம்மணி மனிதப் புதைகுழி வழக்கின் முதன்மை முறைப்பாட்டாளர் கிருபாகரன், யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இயங்கிய இராணுவச் சித்திரவதை முகாம்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்த பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு: சித்திரவதை முகாம்களின் இரகசியப் […]

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும் படைகள் அனுப்பப்படும் தீர்மானம் அமையக்கூடாது. எனவே படையினரை அனுப்பிவைப்பதற்கு முன்னதாகவே நம்பகமான பரிசோதனை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது. ஹெய்ட்டியில் அமைதிப்பணிகளுக்காக இலங்கைப் படையினர் அனுப்பிவைக்கப்படுவது குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான […]

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையானுக்கு, நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் […]