அந்தமானுக்கு ஒரு நீதி, கர்நாடகத்திற்கு ஒரு நீதியா? மேகதாது விவகாரத்தில் ராகுலுக்கு அன்புமணி கேள்வி

‘சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எதிர்த்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் குரல் கொடுத்துள்ளார். சென்னை அண்ணாநகரில் பேட்மிண்டன் போட்டியைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நதிநீர் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் என்பதை நினைவுபடுத்தினார். கர்நாடகாவில் ஏற்கனவே பெரிய அணைகள் உள்ள நிலையில், மீண்டும் மேகதாதுவில் 70 டிஎம்சி கொள்ளளவில் அணை கட்ட நினைப்பது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் முயற்சி என்று அவர் சாடினார். ராகுல் காந்தியின் […]

மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா படுகொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

கடந்த 2008 ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி உட்பட பலரைக் கொன்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (30) உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி குற்றவாளியான உமர் ஹத்தாப் (Umar Hatap) தாக்கல் செய்திருந்த விசேட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதியரசர்களான […]

கலெக்டர் அலுவலகத்தில் வேலை கேட்டு கதறி அழுத பஸ் கண்டக்டர்… நெல்லையில் பரபரப்பு

நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசுப் பேருந்து நடத்துனர் ஸ்ரீதம்பி துரை கதறி அழுதபடி மனு அளித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தன்னை, அதிகாரி ஒருவர் எந்தக் காரணமும் இன்றி கடந்த ஜூன் 19-ஆம் தேதி பணியிலிருந்து நீக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வேலை இழந்ததால் குடும்பம் […]

பிரபல கொத்து உணவக உரிமையாளர் கைதாகிவிடுதலை!

பிரபல கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபர் விராஜ் விக்ரமநாயக்க, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, நுவகொட நீதவான் நீதிமன்றத்தால் தலா ரூபா 50,000 மதிப்புள்ள இரண்டு தனிநபர் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பிரபலமான கொத்து உணவகம் ஒன்றின் உரிமையாளரான தொழிலதிபர் விராஜ் விக்ரமநாயக்க, தனது ஊழியர்களில் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (30) மகரகம பொலிஸாரால் கைது […]

வெனிசுவேலா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1700ஐ தாண்டியது

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,700 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடக்கு வெனிசுவேலாவின் லா குவைரா மாகாணத்தைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 5,034 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெனிசுவேலாவைத் தாக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கங்களுக்குப் பிறகு, தற்போது 600இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் 2-ந்தேதி தவெகவில் இணையவுள்ளதாக தகவல்

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, அதிமுக அதிருப்தி அணியின் முக்கியத் தலைவர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும், ஜூலை 2-ஆம் தேதி தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தனி அணி உருவானது. இதில் எஸ்.பி. வேலுமணி சமாதானமாகி எடப்பாடி பழனிசாமி தரப்புக்குத் திரும்பிய போதிலும், சி.வி. சண்முகமும், சி.விஜயபாஸ்கரும் தொடர்ந்து […]

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்தும் விழிப்புணர்வுக் கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (30.06.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், அண்மை நாட்களாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அனைத்து சாரதிகளும் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருந்தாலும், வாகனம் செலுத்துவதற்குத் தேவையான […]

கனடாவில் 10 பேருடன் மூழ்கிய சுற்றுலாப் படகு: 4 பேரை மீட்ட தம்பதியினர், 6 பேர் நீரில் மூழ்கி பலியானதாக அச்சம்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) கடற்கரையில் 10 பேருடன் பயணித்த விசேட வாடகைச் சுற்றுலாப் படகு (Charter boat) ஒன்று கடலில் மூழ்கியதில், 4 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், எஞ்சிய 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை ரிச்மண்ட் (Richmond) நகருக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, சம்பவ இடத்திற்கு அருகில் தங்களது சொந்த பாய்மரப் படகில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர், உடனடியாகச் செயல்பட்டு கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் […]

கனடா பிராம்ப்டனில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர வீட்டு அத்துமீறல்: ஒருவர் படுகாயம்!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலின் (Home Invasion) தாக்குதலில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை (Peel Police) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் கோர்வே டிரைவ் (Goreway Drive) மற்றும் காஸில்மோர் வீதிக்கு (Castlemore Road) அருகிலுள்ள எஸ்டேட்வியூ சர்க்கிள் (Estateview Circle) மற்றும் ரே அவென்யூ (Rae Avenue) சந்திப்பில் இந்த வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அவசரக்கால […]

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை.. 5 ஆண்டுகள் தொடரும் – திருமாவளவன் பேட்டி

‘மதுரை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தவெக ஆட்சி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய அவர், தவெக அரசு ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். ஆட்சி கவிழ வாய்ப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும், விசிக தனது ஆதரவை முழுமையாகத் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். நாளை நடைபெறவுள்ள […]