கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள்-நினைவேந்தல் நிகழ்வு 

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்மன் கோவில் வீதி சந்தியில் சனிக்கிழமை(20) மாலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன் கல்முனை வாழ் மக்கள் தமிழ் […]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார். 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த இவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த இவர், ஊடகத் துறை மீது கொண்ட ஆர்வத்தால் பகுதிநேர ஊடகவியலாளராகத் தனது பணியைத் தொடர்ந்தார். ‘வீரகேசரி’ நாளிதழ் மற்றும் ‘தமிழ்நெட்’ இணையத்தளம் ஆகியவற்றில் பணியாற்றிய […]

“திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டாலும் ஆச்சரியமில்லை!” – சிபிஎம் சண்முகம்!

சென்னை: தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களின் பழைய கொள்கை விழுமியங்களை இழந்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அதிமுக-வுடனான கூட்டணி குறித்துச் சண்முகத்திடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், சண்முகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “திராவிடக் கட்சிகள் கொள்கை ரீதியாகத் தங்களைச் சுருக்கிக் கொண்டுள்ளன. தேர்தல் அரசியலில் ஓட்டு வேட்டைக்காகச் சாதியப் பாகுபாடுகள் […]

“முதலமைச்சர் விஜய் பேசமாட்டார்; செயலே பேசும்!” – அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடி!

சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், தவெக அரசின் வெளிப்படையான நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார். “எதிர்க்கட்சிகள் விஜய்யின் பேச்சைப் பற்றி விமர்சிக்கிறார்கள். அவர் வாய் திறக்கத் தேவையில்லை, அவருடைய செயல்பாடுகளே மாற்றத்தை உண்டாக்கும்\” என்று கூறினார். ஊழலற்ற நிர்வாகம் குறித்து விளக்கிய அமைச்சர், “RTO மற்றும் நெல் […]

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9A சித்தி பெற்று சாதனை!

யாழ்ப்பாணம்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயினாதீவு கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் (O/L) அகில இலங்கை ரீதியில் மிகச்சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அதிபர் மயூரனின் மகனான ம. கஜவர்சன், வெளியிடப்பட்டுள்ள சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி அனைத்துப் பாடங்களிலும் “9A” சித்தியைப் பெற்றுத் தேறியுள்ளார். நயினாதீவு மகா வித்தியாலயத்தில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு, வழமை போல படகு மூலம் […]

“தந்தை அன்பின் முன்னே தெய்வங்கள் தோற்றே போகும்!” – சீமான் நெகிழ்ச்சி வாழ்த்து!

சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி, தந்தைமார்களின் தியாகத்தை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. “தான் பார்க்காத உலகத்தைக் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தம் தோளில் குழந்தைகளைத் தூக்கி உயர்த்தி உலகைக் காட்டும் உன்னத வழிகாட்டிகள் தந்தைமார்கள்” என்று அவர் தனது பதிவைத் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையைக் கற்றுத்தரும் உலகின் முதல் நாயகர்கள் தந்தைமார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளை […]

புரிந்துணர்வு உட்பட மூன்று நிபந்தனைகளை ஏற்கத்தயார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தமிழரசுக்கட்சி கடிதம்: புதிய பெயர், தேர்தல் கட்சியாக பதிவு, பொதுச்சின்னம் விடயத்தில் இணக்கமில்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரத்தினலிங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் ‘தங்களது 12-05-2026 ஆம் திகதிய கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட […]

காணாமல் போனோரின் உறவினர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை; நீதி நிலைநாட்ட அரசாங்கம் உறுதி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன், யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து […]

“முதலீடுகள் ஆந்திரா சென்றது ஏன்?” – சட்டசபையில் ஆதாரம் வெளியிடுவேன்: அமைச்சர் கீர்த்தனா!

சென்னை: தமிழக தொழில் துறையில் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்ற விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, அதற்கான உண்மையான காரணங்களைச் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என்று அறிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசின் தொழில் துறை முயற்சிகள் குறித்து விளக்கினார். “ஹூண்டாய் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தாமதமான நடவடிக்கைகளே […]

“காணாததைக் கண்டால் கண்டதே சொர்க்கம்!” – ஐயூஎம்எல்-ஐச் சாடிய ஆர்.எஸ்.பாரதி!

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அக்கட்சியின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக-வின் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளதால், பதவி சுகத்திற்காக ஐயூஎம்எல் திமுக-வை விட்டுச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஐயூஎம்எல் வேட்பாளர்களின் வெற்றிக்காகத் திமுக தலைவர்கள் அனைவரும் எவ்வளவு கடுமையாக உழைத்தார்கள் என்பதை அவர் பட்டியலிட்டார். “அடிக்கடி கட்சி மாறுபவர்களை நம்புவது முதலமைச்சர் […]