சென்னை:
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், தவெக அரசின் வெளிப்படையான நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார். “எதிர்க்கட்சிகள் விஜய்யின் பேச்சைப் பற்றி விமர்சிக்கிறார்கள். அவர் வாய் திறக்கத் தேவையில்லை, அவருடைய செயல்பாடுகளே மாற்றத்தை உண்டாக்கும்\” என்று கூறினார்.
ஊழலற்ற நிர்வாகம் குறித்து விளக்கிய அமைச்சர், “RTO மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. அதிகாரிகளின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இல்லாததால், காவல்துறை உட்பட அனைத்துத் துறைகளும் இன்று சுதந்திரமாகச் செயல்படுகின்றன” என்றார். மாவட்டச் செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதாகவும், வாரிசு அரசியல் தவெக-வில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். “மக்கள் விஜய்யின் விசில் சின்னத்தை நம்பித்தான் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையின்படி அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தவெக ஆட்சி தான் தமிழகத்தில் அமையும்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
#MinisterVenkatramanan #TVK #Vijay #ThalapathyVijay #TvkGovernment #CorruptionFree #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #PublicService #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #Economy2026 #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews