புரிந்துணர்வு உட்பட மூன்று நிபந்தனைகளை ஏற்கத்தயார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தமிழரசுக்கட்சி கடிதம்: புதிய பெயர், தேர்தல் கட்சியாக பதிவு, பொதுச்சின்னம் விடயத்தில் இணக்கமில்லை

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் நா.இரத்தினலிங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் ‘தங்களது 12-05-2026 ஆம் திகதிய கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட பரிந்துரைகள், எமது கட்சியின் 17-05-2026 ஆம் திகதிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, முதல் மூன்று பரிந்துரைகளின் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை வரைவு ஒன்றினை எமது பரிசீலனைக்காக வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைவதாக இருந்தால் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது ஆறு பிரதான நிபந்தனைகளின் கீழ் அமைய வேண்டுமென்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் இரத்தினலிங்கத்தினால் 12-05-2026ஆம் திகதியன்று கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கடித்தில்,

இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல்.

புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பொதுவான மையக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுதல். அதாவது தற்போதுள்ள உயர் அங்கத்தை மேலும் வலுப்படுத்துதல்.

அவ்வுயர் அங்கம் தற்போது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டுள்ளதைப் போலவோ அல்லது இலங்கதை; தமிழரசுக்கட்சியின் தரப்பு பரிந்துரை செய்யும் ஒன்றாகவோ அமைதல். எதிர்காலத்தில் வேறு அமைப்புகளும் இணைந்து கொள்ளக்கூடிய வகையில் அவ்வுயர் அங்கம் அமைதல். இறுதி வடிவத்தை இருதரப்பும் பேசி முடிவு செய்தல்.

இணைந்த கட்டமைப்புக்கு ஒரு பொதுப்பெயர் சூட்டுதல். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றோ அல்லது வேறொரு புதிய பெயராக இருக்கலாம்.

மேலே உள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இக் கட்டமைப்பை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தலும், பொதுச் சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளுதலும்.

இவை அனைத்தும் இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், இரு தரப்பினதும் பிரதிநிதிகள் இணைந்து விரிவான ஒரு கட்டமைப்பு பற்றி முழுமையான ஒரு அறிக்கையை தயாரித்தல்

ஆகிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.