சென்னை:
தமிழக தொழில் துறையில் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்ற விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, அதற்கான உண்மையான காரணங்களைச் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என்று அறிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசின் தொழில் துறை முயற்சிகள் குறித்து விளக்கினார்.
“ஹூண்டாய் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தாமதமான நடவடிக்கைகளே முதலீடுகள் வெளியேறக் காரணம். எந்தச் சூழலில், எந்த நேரத்தில் முதலீடுகள் வெளியேறின என்ற முழு விவரங்களும் ஆதாரங்களுடன் என்னிடம் உள்ளன. இதைச் சட்டசபையில் நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தன்னை இன்னும் அமைச்சராகவே நினைத்துக்கொண்டிருப்பதாகவும், மக்கள் வழங்கிய தீர்ப்பை அவர் மதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கீர்த்தனா விமர்சித்தார். தவெக அரசு ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஆட்சியாளர்கள் அதிகாரிகளை வைத்து ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
#MinisterKeerthana #TVK #Vijay #ThalapathyVijay #IndustrialInvestment #AndhraPradesh #TvkGovernment #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #IndustryNews #TamilNaduPolitics #TRPRaja #CorruptionFreeGovernance #TamilNaduNews #PoliticalAttack #Governance #Economy2026 #VijayGovernment #Debate #TNPolitics