நமது மக்கள் அனுபவித்த துயரங்களால் நமது அடையாளம் சிதைந்துவிடவில்லை. அதிலிருந்தே அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ‘தமிழ் சமூக நினைவுச் சின்னம்’ (Tamil Community Memorial) திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பிறைக்குமரன் பேரின்பராசா, தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கேணல் தரத்திலிருந்த தனது தந்தையின் வீரம் மற்றும் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்ததுடன், அவரது தைரியத்திற்கும் தியாகத்திற்கும் மதிப்பஞ்சலி செலுத்தினார். பேரின்பராசா தனது ஆறு வயதில், தனது தாயார் மற்றும் தம்பியுடன் தமிழீழத்திலிருந்து வெளியேறினார். இந்நிகழ்வில் பேசிய பேரின்பராசா: “தமிழீழக் குழந்தைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் […]

“மும்மொழித் திட்டத்தைத் தவெக அரசு ஏற்கக் கூடாது!” – தஞ்சையில் வைகோ அதிரடி பேட்டி!

தஞ்சாவூர்: “மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழித் திட்டத்தையோ முந்தைய திமுக அரசு எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதே உறுதியான நிலைப்பாட்டைத் தான் தற்போதைய தவெக அரசும் பின்பற்ற வேண்டும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் பல்வேறு அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில், முதலமைச்சர் விஜய் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒருவர் சொன்ன கருத்து குறித்து ஆதரித்தோ, மறுத்தோ பேசும் வழக்கம் எனக்கு […]

“இலங்கை சட்டத்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது!” – பன்னாட்டு விசாரணை கேட்டு ராமதாஸ் அதிரடி அறிக்கை!

சென்னை: “இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவது முற்றிலும் வீண்; ஐநா மேற்பார்வையில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணை மற்றும் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு மட்டுமே அவர்களுக்கான உண்மையான நீதி” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஆறாத வடுவாகவும், உலகத் தமிழினத்தின் மனசாட்சியை உலுக்கிய துயரமாகவும் நிலைத்துவிட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு […]

கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வில் அரிய கண்டுபிடிப்பு! முதன்முறையாக முழுமையான சிறிய வட்டப்பானை கண்டெடுப்பு!

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், தொன்மையான சிறிய வடிவிலான முழுமையான வட்டவடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டிருப்பது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடி பஜாரில் உள்ள கஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு இதுவரை 7 பெரிய அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுத் தொடர் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் […]

“தலைமைச் செயலகத்திற்குச் சாப்பாடு எடுத்துட்டுப் போகும் ஒரே சிஎம்!” – அமைச்சர் நிர்மல்குமார் நெகிழ்ச்சிப் பேச்சு!

மதுரை: “தமிழக மக்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசாங்கத்தையும், பார்க்காத அரசுத் துறைகளையும், பார்க்காத ஒரு முதலமைச்சரையும் இனிமேல் தான் பார்க்கப் போகிறார்கள்” என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மிகவும் பெருமிதத்தோடு பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற தவெக-வின் அரசு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முதலமைச்சர் விஜய்யின் அன்றாட அரசுப் பணிகள் குறித்தும், அவரது அர்ப்பணிப்பு குறித்தும் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். […]

“புதிய அரசுக்குக் கால அவகாசம் தேவை!” – முக்கியத் துறைகள் ஒதுக்கப்படாதது குறித்து மு.வீரபாண்டியன் கவலை!

தஞ்சாவூர்: “தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லாட்சியை வழங்க வேண்டும்; ஒரு புதிய அரசு நிலைபெறுவதற்கும் அதன் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கும் நிச்சயம் கால அவகாசம் தேவைப்படும்” என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மு.வீரபாண்டியன், “புதிய தவெக அரசு நடைமுறைகளைச் சாத்தியப்படுத்த நேரம் பிடிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். […]

“உங்களை சிஎம் ஆக்கப் போறோம்.. பிரஸ் மீட்டை நிறுத்துங்க!” – போனில் வந்த ஆஃபர் குறித்து திருமாவளவன் அதிரடிப் பேட்டி!

சென்னை: “தவெக-வுக்கு ஆதரவுக் கடிதம் கொடுத்த பிறகு, மாலை 4.45 மணிக்கு எனக்கு ஒரு போன் வந்தது. உங்களை முதலமைச்சராக அறிவிக்கப் போகிறோம், செய்தியாளர்களைச் சந்திக்காதீர்கள் என்று கூறினார்கள்” எனத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் திரைமறைவில் நடந்த அதிர்வலைகள் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணி நகர்வுகள் குறித்துப் பல்வேறு ரகசியங்களை உடைத்துப் பேசியுள்ளார். அவர் […]

இசைஞானியை நக்கல் அடித்தாரா ஆர்ஜே பாலாஜி? ‘கருப்பு’ பட காப்பிரைட் சர்ச்சைக்குக் கிளம்பும் கடும் எதிர்ப்பு!

சென்னை: இயக்குனர் மற்றும் நடிகரான ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமைக்காக (Copyright) நடத்தி வரும் சட்டப் போராட்டத்தைக் கிண்டல் செய்யும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் நெட்டிசன்கள் மற்றும் இளையராஜா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள இக்காட்சி குறித்து நெட்டிசன் ஒருவர் பேசுகையில், “தங்கள் சொந்தத் துறையில் இருக்கும் ஒரு மூத்த கலைஞர், தன் வாழ்நாள் உழைப்புக்கான […]

“ஆதார் கார்டு இருந்தால்தான் சரக்கு!” – மதுரை மனமகிழ்மன்றத்தின் அதிரடி உத்தரவால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

மதுரை: “ஆதார் அட்டை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும்” என்று மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மனமகிழ்மன்றம் (Recreation Club) அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற உடனே, பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு […]

“மக்களின் தீர்ப்பைச் சிறுமைப்படுத்தக் கூடாது!” – விஜய் குறித்த ரஜினியின் கருத்துக்குத் துரை வைகோ எம்.பி பகிரங்கப் பதிலடி!

திருச்சி: “முதலமைச்சர் விஜய் பெற்ற வெற்றியைச் சினிமா புகழ் என்று மட்டும் கூறி, மக்களின் தீர்ப்பைச் சிறுமைப்படுத்தக் கூடாது; மக்கள் வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில், ரஜினிகாந்தின் ‘சினிமா புகழ்’ குறித்த விமர்சனத்திற்குப் பதிலளித்த துரை வைகோ, “விஜய் முதலமைச்சரானதற்கு 100 சதவீதம் சினிமா […]