“விஜய்க்காகப் புதிய சோபா வாங்கப்படவில்லை!” – அரசியல் விமர்சனங்களுக்குத் திருமாவளவன் அதிரடி விளக்கம்!

சென்னை: முதலமைச்சர் விஜய் விசிக அலுவலகத்திற்கு வருகை தருவதையொட்டி, அங்குப் புதிய சோபாக்கள் வாங்கப்பட்டதாக எழுந்த கடுமையான அரசியல் விமர்சனங்களுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாகப் பதிலடி கொடுத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ் முதலில் ஆதரவளித்தது. அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்தே விஜய் முதலமைச்சராகப் […]
மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நேற்று (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். கடந்த […]
இன்று வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று (18) வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இதில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
“விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!” – முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சீமான் உணர்ச்சிமிகு அறிக்கை!

சென்னை: “ஈழ நிலத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக எதிரிகள் கருதிய அதே முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து, ‘விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!’ என்ற இன மீட்சி முழக்கத்துடன் தமிழ்த்தேசிய இனம் மீண்டெழ வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு சிங்கள இனவாத அரசு நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, […]
முத்துநகர் மக்கள் சூரிய சக்தி மின் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம்?
திருகோணமலை, முத்துநகர் கிராமத்தில் சூரிய சக்தி மின் திட்டத்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடும் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (17) விடுத்துள்ள அவசர ஊடக அறிக்கையில், முத்துநகர் பகுதியில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகப் பல தலைமுறைகளாக விவசாயத்தையே நம்பியுள்ளனர். இவ்வாறான பின்னணியில், அங்கு முன்னெடுக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்திற்காக மக்களின் விவசாயக் காணிகள் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானவை என்ற […]
மகிந்த ராஜபக்ச எயார்பஸ் மோசடியில் தப்பிக் கொள்ள முடியாத ஆதாரங்கள்
எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் நடைபெற்ற நிதி மோசடியில் 800 மில்லியன் டொலர் பணம் சிங்கப்பூர் வங்கி கணக்கொன்றிலிருந்து நிமல் பெரேரா என்ற நபரின் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் வரையிலான பாரிய அளவிலான ஊழல் நடைபெற்றுள்ள விதம் தொடர்பில் 2020 பெப்ரவரி 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் 6 கோடி ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குப் பணமாகக் கையளிக்கப்பட்டதாக இந்த வழக்கின் முதல் சந்தேக நபரான […]
இன்று பிற்பகலுக்கு பின்னர் வானிலை மாற்றம்!
நாட்டின் சில பகுதிகளில் இன்று(18.5.2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுக மாகாணங்களிலும் காலி, மாத்தறை, […]
அம்பாறையில் துப்பாக்கிச் சூடு

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்தச் சோதனையை மேற்கொண்ட போது, சந்தேகநபர் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். பின்னர் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். இதன்போது, நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அடைந்த வெற்றியை கொண்டாட வேண்டியது அவசியம் – சரத் வீரசேகர

30 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அடைந்த வெற்றியை கொண்டாட வேண்டியது அவசியமானது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதிகளை தோல்வியடைய செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இன்னமும் உலகில் சுமார் 32 நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த போர் […]
ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு
மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த அனோஜன் (வயது-28 )என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து ஆட்டுப்பட்டி உள்ள இடத்தை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. குறித்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சனிக்கிழமையும் குறித்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் இதன் போது தேங்கி கிடந்த நீரில் […]