அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம்

இலங்கை இறக்குமதிச் செலவினங்கள் வேகமாக அதிகரித்துச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கும் அரசாங்கம் பல புதிய விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தி வருகின்றது. அதற்கமைய, வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி ரூபாவின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், வாகன இறக்குமதி சுங்க வரியின் மீதான கூடுதல் கட்டணத்தை 50 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது. டொலர் கையிருப்பு பெருமளவில் செலவிடப்படும் இறக்குமதித் துறைகளை இனங்கண்டு, அவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் […]

நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி வணக்கம்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2026இன்று நந்திக்கடலில் மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு […]

மூதூர் – கடற்கரைச்சேனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் – கடற்கரைச்சேனை பிரதேசத்தில் நேற்று(17) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை கடற்கரைச்சேனை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நைஜீரிய இராணுவப் பாடசாலை மீது பயங்கரவாத தாக்குதல்: 17 பயிற்சி பொலிஸார் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பொலிஸார் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதம் நீடித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. யோபே மாநிலத்தின் புனி யாடி பகுதியில் அமைந்துள்ள நைஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படைப் பாடசாலை மீது, கடந்த வெள்ளிக்கிழமை(15.5.2026) அன்று பயங்கரவாதிகள் பல திசைகளில் இருந்தும் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக தேசிய பொலிஸ் […]

மேல் மாகாண ஆளுநர் பதவி விலக முடிவு

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் நேற்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக பணியாற்றுவதற்கான கூடுதல் பொறுப்புகள் மற்றும் தமது குடும்ப கடமைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் உள்ள அதிகரித்து வரும் சவால்களைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். […]

ஸ்ரீ லங்கன் எயார்லைன் வெளிநாட்டு பண பரிவர்த்தனை முறைகேடு… – அனில் ஜயந்த பெர்னாண்டோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய தவறான கொடுப்பனவு மற்றும் இந்தியாவில் நிறுவனத்தின் நிதி முறைகேடு செய்யப்பட்டமை ஆகிய இரு பரிவர்த்தனைகள் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த நிதி முறைகேடு குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சேவை வழங்குநருக்கு செலுத்தபட்ட […]

கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் தைவான் பயணத்திற்குச் சீனத் தூதரகம் கடும் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவான் தீவுக்குச் செல்வதற்கு எதிராகக் கனடாவிற்கான சீனத் தூதர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, “கனடாவின் இறையாண்மையை” நிலைநாட்டுவதற்காகக் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் சாங் (Michael Chong) அடுத்த வாரம் தைவான் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தப் பயணம் “சீனா-கனடா உறவுகளுக்கான ஒரு சிவப்பு எல்லைக் கோட்டை” (Red line) மீறுவதாகக் கூறி, சீனத் தூதரகம் ஏற்கனவே இப்பயணத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கன்சர்வேடிவ் […]

குவீன் வெஸ்ட் பகுதியில் நடந்த சண்டையின் போது துப்பாக்கிச் சூடு:  துப்பாக்கி மீட்பு, 

கடந்த வார இறுதியில் டொராண்டோவின் குவீன் வெஸ்ட் (Queen West) பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றிற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், 29 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இச்சம்பவம்  குவீன் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Queen Street West) மற்றும் பாத்தர்ஸ்ட் ஸ்ட்ரீட் (Bathurst Street) பகுதிக்கு அருகில் உள்ள, பெயர் குறிப்பிடப்படாத நிறுவனம் ஒன்றிற்குள் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை […]

ஏர்ல் பேல்ஸ் பூங்காவில் கடைசியாகக் காணப்பட்ட 14 வயது சிறுமியைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்திய டொராண்டோ காவல்துறை

எஸ்தர் (Esther) என்ற 14 வயது சிறுமியைக் கண்டறிய உதவும் வகையில் கடற்படை தேடல் பிரிவு (Marine search unit) மற்றும் ட்ரோன்கள் (Drones) உள்ளிட்ட கூடுதல் வளங்கள் பயன்படுத்தப்படும் என டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு முழு நாட்களுக்கு முன்பு காணாமல்போன 14 வயது சிறுமியைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி வரும் டொராண்டோ காவல்துறையினர், நார்த் யார்க் (North York) பகுதியில் ஒரு தற்காலிகக் கட்டுப்பாட்டு மையத்தை (Command post) அமைத்துள்ளனர். எஸ்தர் கடைசியாகக் […]

இன்று முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நினைவேந்தல்

இன்று முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்  முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நினைவுகூரப்படவுள்ளது . முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு , அதிகாரப்பூர்வ நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரலை அறிவித்துள்ளது. காலை 10.15 மணி – பிரகடனம் வெளியீடு காலை 10.29 மணி – மணி ஒலித்தல் காலை 10.30 மணி – அகவணக்கம் காலை 10.31 மணி – பொதுச் சுடர் ஏற்றுதல் […]